tamilnadu

img

மோடி அரசு அமைத்த ராமர் கோயில் அறக்கட்டளை... ‘மசூதி இடிப்பு’ சாமியார்கள் 2 பேருக்கும் முக்கியப் பதவி

புதுதில்லி:
பாபர் மசூதி இடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட- ராமஜென்மபூமி நியாஸ்  சாமியார் நிருத்யா கோபால் தாஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் சம்பத் ராய் பன்சால் ஆகிய 2 பேருக்கும், ராமர் கோயிலை கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா’ அறக் கட்டளையில் முக்கியப் பதவி வழங்கப்பட்டுள்ளது.அயோத்தியில் 400 ஆண்டு களுக்கும் மேலாக இருந்த பாபர்மசூதி 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி, சங்-பரிவார் அமைப்புக்களால் இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்டது.

இதுதொடர்பாக, அக்டோபர் 5, 1993 அன்று, 48 பேர் மீது மத்தியகுற்றப்புலனாய்வுக் கழகம் (சிபிஐ) ஒருங்கிணைந்த குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.இதில், ராம ஜென்மபூமி நியாஸ் தலைவர்- சாமியார் நிருத்யா கோபால் தாஸ், விஎச்பி தலைவர் சம்பத் ராய் பன்சால் ஆகியோரின் பெயரும் சேர்க்கப்பட்டு இருந்தது. இவர்கள், மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னதாக, அயோத்தியில் கூடியிருந்த கரசேவகர்கள் மத்தியில் உரையாற்றி வெறியைத் தூண்டி விட்டார்கள் என்பது முக்கியக் குற்றச்சாட்டாகும். அதனடிப்படையில், நிருத்யாகோபால் தாஸ் மற்றும் சம்பத் ராய் உள்ளிட்டோர் மீது 120-பி (கிரிமினல் சதி),153-ஏ, 153-பி (பல்வேறு அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல்), 295 (வழி பாட்டுத் தலத்தை அவமதிக்கும்நோக்கத்துடன் தீட்டுப்படுத்து தல்), 295-ஏ (மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் வேண்டுமென்றே தீங்கிழைத் தல்) மற்றும்பிரிவு 505 ஆகியவற்றின் கீழ்வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இந்நிலையில், மேற்கண்ட இருவரையும்தான் ராமர் கோயிலைக் கட்டும் ‘ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா’ அறக்கட்ட ளைக்கு, முறையே தலைவராக வும், பொதுச்செயலாளராகவும் மோடி அரசு நியமித்துள்ளது.

;