tamilnadu

img

அயோத்தியில் ‘சர்ச்சைக்குரிய’ நிலம் முழுவதுமே ராமர் பிறந்த இடம்தானாம்

புதுதில்லி:
அயோத்தியில் ‘சர்ச்சைக்குரிய’ (அதா வது பாபர் மசூதி இருந்த இடம்) நிலத்தில் ராமர் பிறந்த இடத்தை குறிப்பிட்டுக் கூறமுடியாது என்றும்,  அயோத்தியில் பாபர் மசூதிஇருந்த முழுப் பகுதியுமே ராமர் பிறந்த இடம்தான்என்றும் உச்சநீதிமன்றத்தில் ராம்லாலா அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பராசரன் வாதாடினார்.அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம்ஆண்டு அளித்ததீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சம்பந்தப்பட்ட சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லாலா ஆகியவை சரிசமமாக  பிரிந்து கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது. 

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்தப் பிரச்சனைக்கு சம்பந்தப்பட்ட 3 அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரச தீர்வுகாண, முன்னாள் நீதிபதிகுழுவை உச்சநீதிமன்றம்  அமைத்தது. ஆனாலும், இந்த குழுவின் பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படவில்லை. இதனால், இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு செவ்வா யன்று முதல் தினமும்  நடத்தி வருகிறது.  செவ்வாயன்று நிர்மோகி அகாரா சார்பில்வாதம் செய்யப்பட்டது.  இரண்டாம் நாள் விசாரணையில் ராம்லாலா அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பராசரன்வாதிடுகையில், ‘‘இந்துக்கள் வழிபடும் கடவுளின் பெயரே,  அவர் பிறந்த இடத்துக்கு ராமஜென்ம பூமி என வைக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ராமர் இங்குதான் பிறந்தார் என்பதை எப்படி நிரூபிக்க முடியும்? அயோத்தியில் பாபர் மசூதி இருந்த முழு பகுதியுமே  ராமர் பிறந்த இடம் என்பது லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை. அங்கு சிலைகள் இன்னும் உள்ளது. அங்கு யார் வழிபட்டார்கள் என்பதன் அடிப்படை யில்தான், அது கோயிலா அல்லது மசூதியாஎன்பதை முடிவு செய்ய  முடியும்’’ என்றார்.இந்நிலையில், மூன்றாம் நாளான வியாழனன்று ராம்லாலா அமைப்பின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பராசரன், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் முழுவதையுமே ராமர் பிறந்த இடமாகவே கருத வேண்டும் என்றுதெரிவித்தார். அயோத்தியில் சர்ச்சைக்குரியநிலத்தில் ராமர் பிறந்த இடத்தை குறிப் பிட்டுக் கூறமுடியாது என்றும் வாதிட்டார். 

;