புதுதில்லி:
அயோத்தியில் “சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். இஸ்லாமியர்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை உத்தரப்பிரதேச அரசு வழங்கவேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு தனியாக அறக்கட்டளை உருவாக்கி, நெறிமுறைகளை வகுக்கவேண்டும்.” என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.இந்நிலையில், அயோத்தி வழக்கில், இதற்கு முன்பு,சமரசக் குழு என்ன பரிந்துரையை வழங்கியதோ, அதுவே தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் எதிரொலித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.அயோத்தி வழக்கில் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய அயோத்தி சமரச பேச்சுவார்த்தைக் குழு, அமைக்கப்பட்டு இருந்தது. இந்தக் குழு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி, அதன் முடிவில், “சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டப்பட வேண்டும், கோயிலுக்கு வெளியேமசூதி கட்ட இஸ்லாமியர் களுக்கு நிலம் வழங்கலாம்என்று பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அந்த பரிந்துரை அனைத்துத் தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு வந் தது. ஆனால், உச்ச நீதிமன்றமும் தற்போது சமரசக் குழுபரிந்துரை அடிப்படையிலேயே, மசூதி இருந்த இடத்தில் கோயில்; மசூதிக்குவேறு இடம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.