tamilnadu

img

மயிலாடுதுறை – தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் போக்குவரத்து மக்களவையில் எஸ்.ராமலிங்கம் வலியுறுத்தல்

புதுதில்லி, மார்ச் 12- மயிலாடுதுறைக்கும் தரங்கம்பா டிக்கும் இடையே மீண்டும் ரயில் போக்கு வரத்தைத் தொடங்கிட வேண்டும் என்று  மயிலாடுதுறை திமுக மக்களவை உறு ப்பினர் எஸ். ராமலிங்கம் வலியுறுத்தி னார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொ டர் நடைபெற்று வருகிறது. மக்களவை யில் நாடாளுமன்ற நடத்தை விதி 377 ஆவது பிரிவின்கீழ் அவசரப் பொது  முக்கியத்துவம் வாய்ந்தபிரச்ச னைகளை எழுப்பும் நேரத்தில் எஸ். ராம லிங்கம் பேசியதாவது: 1926இலிருந்து மயிலாடுது றைக்கும், தரங்கம்பாடிக்கும் இடையே சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தி ற்கு இடையே மயிலாடுதுறை, மண்ண ம்பந்தல், செம்பனார்கோவில், ஆக்கூர்,  திருக்கடையூர் (புகழ்மிக்க சதாபி ஷேச கோவில் உள்ள இடம்), தில்லை யாடி, தரங்கம்பாடி ஆகிய ஊர்கள் இருக்கின்றன. இவ்விடங்கள் அனை த்தும் வரலாற்றுரீதியாகவும், மத ரீதி யாகவும், கலாச்சார ரீதியாகவும், வணிக  ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் முக்கி யத்துவம் உடைய இடங்களாகும். லுத்த ரன் கிறித்தவர் சீகன் பால்கு முதன்முத லில் தரங்கம்பாடியில்தான் வந்து இற ங்கினார். இது மிகவும் பழைமையான கடற்கரை நகரமாகும். கல்விரீதியாக வளர்ச்சிபெற்ற இடமுமாகும். இந்தி யாவின் மரத்தாலான முதல் அச்சுக்கூ டம் இங்குதான் நிறுவப்பட்டது. டானிஷ்  நாட்டினர் இங்கு ஆட்சி செய்துள்ளனர். அவர்கள் கோட்டை இப்போது தொ ல்பொருள் துறையினரால் நிர்வகிக்க ப்பட்டு வருகிறது. தரங்கம்பாடி சொசை ட்டி என்று இப்போதும் டென்மார்க்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும்கூட தரங்கம்பாடி எப்போதாவது அவர்களின் தலைமை யிடமாகச் செயல்படும். புராதன சின்ன ங்கள் ஏராளமாக உள்ள இடமாகும். கட ற்கரையில் மாசிலாமணிநாதர் என்னும் இந்துக் கோவில் இருக்கிறது. தில்லை யாடி என்பது மகாத்மா காந்தியுடன் தென் ஆப்ரிக்காவில் போராடிய வீரா ங்கனை வள்ளியம்மை பிறந்த இடமா கும். காந்திஜி இக்கிராமத்திற்கு 1915இல்  வந்திருக்கிறார். சைக்கிளைப்போன்றே ரயிலும் ஏழைகளின் வாகனமாகும். ஆனாலும் 1987இல் இந்தப் பாதை மூடப்பட்டது. இதனை மீண்டும் தொடங்கிட வேண்டும் என்றும், அதன்மூலம் நீண்ட காலமாக இருந்துவரும் இப்பகுதி மக்க ளின் குறையினைப் போக்கிட வேண்டும்  என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எஸ். ராமலிங்கம் கூறினார்.

;