tamilnadu

img

அகாடமி விருதை திருப்பியளித்த உருதுமொழிப் பேராசிரியர் .... குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு

புதுதில்லி:
மத அடிப்படையிலான குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு நாடு முழுவதும், நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது.ரொமிலா தாப்பர், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட வரலாற்று ஆய்வாளர்கள், பிரபாத் பட்நாயக் போன்ற பொருளாதார அறிஞர், ஏ.பி. ஷா போன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள், நயன்தாரா சாகல், அருந்ததி ராய் உள்ளிட்ட எழுத்தாளர்கள், அபர்ணா சென், நந்திதா தாஸ், ஆனந்த் பட்வர்தன், பி.சி. ஸ்ரீராம், சித்தார்த் போன்ற திரைப்பிரபலங்கள் பலர் பிரதமர் மோடிக்கு கடிதம் மூலமாக தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். அப்துர் ரஹ்மான் என்ற ஐபிஎஸ் அதிகாரி தனது ஐஜி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தின் உருதுத்துறை முன்னாள்  தலைவரும் பேராசிரியருமான யாகூப் யாவர், உத்தரப்பிரதேச உருது அகாடமி வழங்கிய விருதைத் திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “எனது விருதை திருப்பி அளிப்பது தொடர்பான கடிதத்தை, அகாடமிக்கு அனுப்பி வைத்துள்ளேன். உ.பி. உருது அகாடமியால் வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாய் விருதுத் தொகையையும் காசோலையின் மூலம் திருப்பி அனுப்பி வைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.“நான் வயதானவன், என்னால் தெருவில் இறங்கிப் போராட முடியாது. விருதைத் திருப்பியளிப்பது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாதுதான், ஆனாலும் அமைதியாக இருக்கஎன் மனசாட்சி என்னை அனுமதிக்கவில்லை. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனது எதிர்ப்பை காட்ட நான் செய்ய முடிந்தது இதுதான்” என்று யாகூப் யாவர் குறிப்பிட்டுள்ளார்.

;