tamilnadu

img

பலவந்த தேசியவாதத்தால் ஒருபோதும் பிரச்சனைகள் தீராது!

புதுதில்லி:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் அரசமைப்புச் சட்டப்பிரிவு ‘370’ திரும்பப் பெறப் பட்டது, கடந்த 2 நாட்களாக பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது.மாநில உரிமைகளைப் பற்றிப் பேசும் ஆம் ஆத்மி, பிஜூஜனதாதளம், அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்குதேசம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள், எதிர்பாராத வகையில் 370நீக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தன. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மசோதாவை எதிர்த்துள்ள போதும், அந்தக் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் பாஜக அரசின் மசோதாவை ஆதரித்து கருத்து தெரிவித்தனர். இந்நிலையில்தான், காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம், பலவந்த தேசியவாதம் மூலம்பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.“ஜம்மு - காஷ்மீரின் முதல் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர் ஷா பஸல். அவர், ஜம்மு- காஷ்மீர் விஷயத்தில் தற்போதைய மத்திய அரசின் செயல் பாடுகளை மிகப்பெரிய துரோகம் என்று குற்றம் சாட்டுகிறார்.ஒரு அதிகாரியான ஷா பஸல் கூட இவ்வாறு சிந்தித் தால், ஜம்மு - காஷ்மீரில் உள்ள லட்சக்கணக்கான சராசரி மக் கள் என்ன நினைப்பார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்?” என்று கூறியுள்ளார்.மேலும், “பலவந்த தேசியவாதத்தின் மூலம் உலகில் எந்தபிரச்சனையாவது தீர்க்கப்பட்டதுண்டா?” என்றும் மோடி அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

;