tamilnadu

img

சட்டத்தின் கம்பீரத்திற்கு சவால் விடுகிறார்.... நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளியே...

புதுதில்லி:
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், நீதிமன்றத்தை மிகக் கடுமையாக அவமதித்துள்ளார் என்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா, கவாய், கிருஷ்ணாமுராரி ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வுதீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள்ஆகஸ்ட் 20-இல் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

சமூக செயற்பாட்டாளரும், மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண், கடந்த ஜூன் 27 அன்றுடுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்துக்களில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் செயல்பாடுகளை விமர்சித்திருந்தார்.குறிப்பாக, கொரோனா காலத்தில் புலம் பெயர்தொழிலாளர்கள் வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கையாண்ட விதம், விசாரணை நடத்திய முறை,கொரோனாவைக் காரணம் காட்டி, வழக்குகளை விசாரணைக்கு எடுக்க மறுப்பது உள்ளிட்ட விஷயங்களை கேள்விக்கு உட்படுத்தி இருந்தார். குறிப்பாக, முன்னாள் தலைமை நீதிபதிகள் 4 பேர் ஜனநாயக அழிப்புக்கு துணைபோனதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இதையொட்டி, தானாகவே முன்வந்து பிரசாந்த்பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தஉச்ச நீதிமன்றம், தற்போது விசாரணையின் முடிவில் பிரசாந்த் பூஷணை குற்றவாளி என்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக 108 பக்க தீர்ப்பை நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.அதில், பூஷணின் டுவிட்டர் பதிவுகள், பொய்யானவை, தீங்கிழைக்கக் கூடிய மற்றும் அவதூறானவை. அத்துடன் இந்திய ஜனநாயகத்தின் முக்கியமான தூண்களில் ஒன்றான நீதித்துறை மற்றும்தலைமை நீதிபதி மீதான மதிப்பையும் அதிகாரத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தக் கூடியவை என்றுகூறியுள்ளனர். மேலும் இவை நீதித்துறை நிர்வாகம் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை பெருமளவில் அசைத்து உலுக்கும் என்பதிலும் சந்தேகமில்லை என்பதால், அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடித்தளத்தை அசைப்பதற்கான ஒரு முயற்சியை இரும்புக் கையால் கையாள வேண்டியது இருக்கிறது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

;