tamilnadu

img

விளையாட்டை, தாக்குதலோடு ஒப்பிடாதீர்கள் அமித் ஷா

புதுதில்லி:
மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற, உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட் டத்தில் இந்திய அணி, பாகிஸ் தான் அணியை டக்வொர்த் லீவிஸ் முறையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.
இதையடுத்து, இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துதெரிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்திய கிரிக்கெட் அணியால் பாகிஸ்தான் மீது மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று,
விளையாட்டை, சண்டையோடு முடிச்சுப் போட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. பலரும் அமித் ஷாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பாகிஸ் தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜேன் ஆசிப் கபூரும், கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். “டியர் அமித் ஷா, ஆமாம் உங்கள் அணி சிறப்பாக விளையாடியது. வெற்றியும் பெற்றது. அதற்காக கிரிக் கெட் வெற்றியையும், ராணுவத் தாக்குதலையும் ஒப்பிட முடியாது. இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.சந்தேகம் இருந்தால் இரண்டுஇந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தி இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுத்ததை தயதுசெய்து நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்” என்று கபூர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

;