tamilnadu

img

பிளாஸ்மா சிகிச்சை அங்கீகரிக்கப் பட்டதல்ல!

கையை விரித்த  மத்திய அரசு

கொரோனா சிகிச்சைக்கு பிளாஸ்மா சிகிச்சை யைப் பயன்படுத்தலாம் என்று கூற போதுமான ஆதா ரங்கள் இல்லை என்று சுகாதார அமைச்சகம் திடீரென கைவிரித்துவிட்டது. பிளாஸ்மா சிகிச்சை என்பது கொரோனாவிற்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையல்ல. இது தற்போது ஆராயப்பட்டு வரும் பல சிகிச்சை முறை களில் இதுவும் ஒன்றாகும்.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி லாவ் அகர்வால் கூறுகையில், “பிளாஸ்மா சிகிச்சை உட்பட நாட்டில் கொரோனாவிற்கு அங்கீக ரிக்கப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை. பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது, மேலும் இது ஒரு சிகிச்சையாக ஆதரிக்க எந்த ஆதார மும் இல்லை. இது பரிசோதனை நிலையில் மட்டுமே உள்ளது. சரியாகப் பயன்படுத்தாவிட்டால் அது உயி ருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். பிளாஸ்மா சிகிச்சை யின் செயல்திறனை அளவிடுவதற்காக மருத்துவ ஆரா ய்ச்சி நிறுவனமான ஐ.சி.எம்.ஆர் நாடு தழுவிய ஆய்வை மேற்கொண்டு வருகிறது. பிளாஸ்மா சிகிச்சை யை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒரு சோதனை ஆய்வாக மட்டுமே பயன்படுத்துகிறது” என்றார்.

;