tamilnadu

img

கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்த திட்டம்

புதுதில்லி, மே 5- கொரோனா வைரஸை எதிர்த்துப் போரா டுவதற்காக உலக சுகாதார அமைப்போடு (WHO) இணைந்து இந்தியா செயல்படு கிறது. கொரோனா சோதனையின் ஒரு பகுதி யாக 1,000 டோஸ் அளவிலான ரெம்டெசி விர் மருந்தை இந்தியா வாங்கியுள்ளதாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள் ளார். இது மாநிலங்க ளில் உள்ள சில நோயா ளிகளுக்கு பரிசோதிக் கப்படுமென தெரிவித்துள்ளார்.

ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்து வது குறித்து அரசு உயர் மட்டத்தில் விவா தித்து வருகிறது. ஐ.சி.எம்.ஆர், சி.எஸ். ஐ.ஆர் விஞ்ஞானிகளும் மருந்தை பயன் படுத்துவது குறித்து பேசி வருகின்றனர்.  நோய்த்தொற்று பரவுவதை தடுப்ப தற்கும் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் ஊரடங்கை தளர்த்துவதற்கும் இடையி லான வர்த்தகப் பரிமாற்றம் குறித்து குறிப் பிட்ட ஹர்ஷ்வர்தன், “மக்களின் வாழ்க்கை, பொருளாதார நல்வாழ்வு இரண்டும் முக்கிய மானவை. என்னைப் பொறுத்தவரை நாட்டி லுள்ள ஒவ்வொரு உயிரையும் காப் பாற்றுவதே முதன்மையான கடமையா கும். ஊரடங்கை தளர்த்தியது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கையாகும் என்றார்.

தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் (என்ஐஐஐடி) நடத்திய சோதனையில், ரெம்டெசிவிர் மருந்தை உட்கொண்ட நோயாளிகள் கொரோனா விலிருந்து விரைவில் மீண்டதாக தெரி வித்துள்ளது. அதேநேரத்தில் ஹெபடைடிஸ், எபோலாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

;