tamilnadu

img

அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியா நிலை படுமோசம்!

புதுதில்லி:
உலகின் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா, மிகமோசமான முறையில் 141-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று உலக நாடுகளின் அமைதி குறித்து ஆய்வு நடத்தியது. சமூகப் பாதுகாப்பு, உள்நாட்டுப் பிரச்சனைகள், சர்வதேச பிரச்சனைகள் மற்றும் நாட்டின் இராணுவ செயல்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், ‘2019-ஆம் ஆண்டின் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலை’ அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.இதில், இந்தியா கடந்த முறையை விட, 2019-ஆம் ஆண்டில் 5 இடங்கள் பின்னோக்கிச் சென்றுள்ளது.

உலகின் அமைதி மிகுந்த நாடுகளின் பட்டியலில் மொத்தம் 163 நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியாவுக்கு 141-ஆவது இடமே கிடைத்துள்ளது. கடந்தமுறை 136-ஆவது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.தெற்காசிய நாடுகளை எடுத்துக் கொண்டால், பர்மா 15-வது இடத்திலும், இலங்கை 72-வது இடத்திலும், நேபாளம் 76 இடத்திலும், வங்கதேசம் 101-வது இடத்திலும் இருக்கின்றன. ஆனால், இந்த சின்னஞ்சிறிய நாடுகளை விடவும் இந்தியா மோசமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்ததாக பாகிஸ்தான் 153-ஆவது இடத்தில் உள்ளது.

உலகின் மிக அமைதியான நாடுகள் பட்டியலில், ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. 2008-ஆம் ஆண்டு முதலே ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடத்தில்தான் இருந்து வருகிறது. நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல் மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளும் உலக அமைதி குறியீட்டின் (ழுஞஐ) பட்டியலில் முன்னணியில் இடம்பிடித்துள்ளன. ஆப்கானிஸ்தான் நாடு, பட்டியலில் கடைசி (163-ஆவது) இடத்தில் வந்துள்ளது.

;