tamilnadu

img

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு... உ.பி. பவன் முன்பு ஆர்ப்பாட்டம் முகம்மது ரியாஸ் கைது

புதுதில்லி:
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தில்லியிலுள்ள உத்தரப்பிரதேச பவன் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர்சங்கத்தின் அகில இந்திய தலைவர் முகமது ரியாஸ் வெள்ளியன்று கைது செய்யப்பட்டார். பெண்களை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்துஅப்புறப்படுத்தினர். ஜேஎன்யு மாணவர்களின் தலைவர் சபாஷ் சந்திராவையும் கைது செய்தனர்.இருபதுக்கும் மேற்பட்டோரை சுட்டுக்கொன்ற உத்தரப்பிரதேச  காவல்துறையின் நரவேட்டையை கண்டித்து உ.பி.பவன் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அமைதியான முறையில் நடந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக காவல்துறை முயன்றதாகவும் முகம்மது ரியாஸ் கூறினார். எப்படிப்பட்ட அடக்குமுறை நடந்தாலும் இந்தியாவில் மாணவர்களும், இளைஞர்களும் தொடர்ந்து போராடவே செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். சிஆர்பிஎப், தில்லி காவல்துறையினர் மந்திர் மார்க்குக்கு மாணவர்களுடன் வந்த பேருந்துகளை தடுத்துநிறுத்தி பறிமுதல் செய்தனர். கவுடில்யா மார்க்கில் நடந்த போராட்டத்தின் போது மோதல் ஏற்பட்டது.

;