புதுதில்லி, மே 6- கொரோனா பரவலால் இந்தியா வில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நான்கில் ஒருவர் வேலைவாய்ப்பை இழந்துள்ள தாக, நாட்டின் பொருளாதார நிலையை கண்காணிக்கும் சிஎம்ஐஇ அமைப்பு தெரி வித்துள்ளது. இதுதொடர்பாக சிஎம்ஐஇ அமைப்பு வெளியிடப்பட்டுள்ள மாதாந்திர அறிக்கையில், “ கொரோனாவால் பொரு ளாதாரத்தின் பல முக்கியமான துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் வேலை நெருக்கடியை நாடு எதிர்கொள் கிறது. முறைசார் மற்றும் முறைசாரா துறை ஊழியர்களை கொரோனா மூழ்க டித்து அதிகமான மக்களை வறுமையில் தள்ள அச்சுறுத்துகிறது. ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 23.5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
குறிப்பாக பெரிய மாநிலங்களான தமிழ்நாடு, ஜார்க்கண்ட் மற்றும் பீகா ரில் வேலையின்மை அதிகமாக இருந் தது. சிறிய, நடுத்தர மற்றும் மைக்ரோ நிறு வனங்கள், விடுதிகள், உணவகங்கள், மல்டிபிளெக்ஸ் நிறுவனங்கள், சில்லரை விற்பனை, விமான நிறுவனங்கள், உற் பத்தி மற்றும் ஊடகங்கள் இந்த மாநிலங்க ளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.