tamilnadu

img

மாற்றுத்திறனாளியின் கழுத்தை நெரித்த கொடூரம்....

புதுதில்லி:
அமெரிக்காவின் மின்னாபொலிஸ் காவல்துறையினர் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டை கொடூரமாக கழுத்தை  நெரித்து கொலை செய்தனர். நிறவெறியுடன் நடந்த இந்த படுகொலை அமெரிக்கா மட்டுமின்றி உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதுபோன்ற ஒரு கொடூரத்தை ராஜஸ்தான் காவல்துறை அரங்கேற்றியுள்ளது. அதுவும் ஒரு மாற்றுத்திறனாளி மீது, அவர் முக கவசம் அணியவில்லை என்கிற காரணத்துக்காக இது நடந்துள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம்ஜெய்ப்பூரில் வியாழனன்றுமாலை முகேஷ் குமார் என்கிற மாற்றுத்திறனாளியை தரையில் வீழ்த்தி அவரது கழுத்தை தனது கால் முட்டியால் போலீஸ்காரர் ஒருவர்நசுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இரண்டு காவல்துறையினர் முகேஷின் கால்களை பிடித்துக்கொள்ள வாட்டசாட்டமான மற்றொரு காவலர் பின் கழுத்தை நசுக்குவதும், தாக்குவதும் வீடியோ காட்சியில் பதிவாகி உள்ளன. அதிக அளவிலான மக்கள் முன்னிலையில் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது.   

ஆனால், காவல்துறையினரை தாக்கியதாவும், தொற்று நோய் தடுப்பு பிரிவின் கீழும் முகேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தேவ்நகர் காவல் அதிகாரிசோம்கரன் தெரிவித்ததுள்ளார். ஜெய்ப்பூர் டிசிபி ப்ரீத்தி சந்திராவும் காவல்துறை நடவடிக்கையை ஆதரித்துள்ளார். ஆனால், மனிதாபிமானமற்ற காவல்துறையினருக்கு எதிராக ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்கிற குரல் வலுத்து வருகிறது.  

;