tamilnadu

img

வெளிநாட்டுப் பொருட்களை புறக்கணிப்பதல்ல... சுதேசி.... மோகன் பகவத் யாருக்குச் சொல்கிறார்...?

புதுதில்லி:
சுதேசி கொள்கை என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையுமே புறக்கணிக்க வேண்டும் என புரிந்து கொள்ளத் தேவை இல்லைஎன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். 

கொரோனா பொதுமுடக்கக் கால பாதிப்புகளை சரி செய்கிறேன்என்ற பெயரில் ரூ. 20 லட்சம் கோடிரூபாய் அளவிற்கான பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார். அதற்கு, ‘ஆத்மநிர்பார் பாரத் அபியான்’ என்று- அதாவது சுயசார்பு பொருளாதாரத் திட்டம் என்று பெயர் சூட்டினார்.இதனிடையே, எல்லையில் சீனராணுவத்துடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீன செயலிகளுக்குத் தடை விதித்த மோடிஅரசு, சீனப் பொருட்கள் இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. சீன நிறுவனங்களுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் ரத்துசெய்யப்பட்டன. இதனால் ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ் துறைகளுக்குத் தேவையான சீன இறக்குமதி மூலப்பொருட்களுக்கு இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. உற்பத்தியிலும் அது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், இணையவழி புத்தக வெளியீட்டு விழா ஒன்றில்ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றுப் பேசியுள்ளார். அப்போது, சுதேசி கொள்கைக்கு புதியவிளக்கம் அளித்துள்ளார்.

“ஒவ்வொரு வெளிநாட்டுப்பொருளையும் புறக்கணிப்பதுதான் சுதேசி என்பது அர்த்தம் அல்ல.ஒருநாட்டில் குறிப்பிட்ட தொழில்நுட் பம் அல்லது பொருட்கள் கிடைக் காமல் போகும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து அவற்றை பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.மேலும், “வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் தொழில்நுட் பத்தை நமது தேசத்திற்கேற்ப மறுவடிவமைப்பு செய்து கொள்ள வேண்டும். வெளிநாடுகளின் பொருட்களை புறக்கணிப்பதற்கு பதில் உள்நாட்டில் அவற்றை மேம்படுத்துவதற்கு நாம் முன்னுரிமை தரவேண்டும்” என்று குறிப்பிட் டுள்ளார்.

;