tamilnadu

img

எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது கர்நாடக சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

                                                    நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் : குமாரசாமி
பலரும் பலவாறு பேசுவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயார் என்று  கர்நாடக முதல்வர் குமாரசாமி சபாநாயகரிடம் தெரிவித்தார். கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் வெள்ளியன்று மதியம் தொடங்கியது. இதில் முதல்வர் குமாரசாமி பேசுகையில், சட்டசபையில் அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளேன். அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள். பலரும் பலவாறு பேசுவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது நல்லது என்றார். இந்நிலையில் ஜூலை 17ம்தேதி அன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

புதுதில்லி,ஜூலை 12- கர்நாடக ‘அதிருப்தி’ எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கூடாது என்றும் சபாநாயக ருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. கர்நாடக ‘அதிருப்தி’ எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜினாமா கடித ங்கள் மீது நேற்றைக்குள்( வியாழன்) முடிவெடுக்குமாறு சபாநாயகரை கேட்டுக் கொண்டது. மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தர விட்டது. மும்பையிலிருந்து, பெங்களூரு வந்த 10 எம்எல்ஏக்களும், சபாநாயகர் ரமேஷ் குமார் முன் ஆஜராகி, புதிய ராஜி னாமா கடிதங்களை கொடுத்தனர். இதன் பின்னர் சபாநாயகர் ரமேஷ் குமார் கூறுகையில், அதிருப்தி எம்எல்ஏக்க ளின் ராஜினாமா கடிதங்கள் மீது, மின்னல் வேகத்தில், முடிவெடுக்க முடியாது என்றார். இந்நிலையில், கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறுகையில், கர்நாடக சட்டமன்ற சபாநாயகர், உச்சநீதிமன்ற அதிகாரத்திற்கு சவால் விடும் வகையில் செயல்படுகிறாரா என  கேள்வி எழுப்பினார். அப்போது, கர்நாடக சபாநாயகர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சபாநாயகர் ரமேஷ் குமார், கர்நாடக சட்டமன்றத்தின் மூத்த உறுப்பினர் ஆவார்.

சபாநாயகர், அரசியலமைப்பு பதவி வகிப்பவர் என்று கூறி பேரவை தலைவருக்கான அதிகாரங்களை, சட்டக்கூறுகளை பட்டியலிட்டார். முதலமைச்சர் குமாரசாமி தரப்பில் ஆஜரான, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறி ஞர் ராஜீவ் தவான், சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்து கருத்துக் கேட்கா மல், நேற்றைய உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருப்பதாகவும் அந்த அதிருப்தி எம்எல்ஏக்களில், ஒருவர்  மீது முறைகேடு புகார் இருப்பதால், அவ ர்கள் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடு முன், தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்குமாறு வலியுறுத்தினார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதங்கள் மீது, செவ்வாய்க்கிழமை வரை சபாநா யகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது. அவர்களை தகுதி நீக்கம் செய்வது போன்ற முடிவுகளையும் எடுக்க கூடாது என்றும் சபாநாயகருக்கு உத்தரவிட்டது. மேலும் எம்எல்ஏக்கள் பிரச்சனை, அரசியல் சாசன விவகாரம்  என்பதால் இதுகுறித்து விரிவாகவும், கவனமாகவும் விசாரிக்க வேண்டியுள் ளது. எனவே, அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

;