tamilnadu

img

முஸ்லிம் தனிநபர்  சட்டவாரியம் மேல்முறையீடு..

புதுதில்லி:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான ஜபார்யப் ஜிலானி தெரிவித்துள்ளார். இந்த வழக்கைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட தரப்பினரும், சாட்சியங்கள் அளித்தவர்களும் கூட மேல்முறையீடு செய்ய உரிமை இருக்கிறது. அந்த வகையில், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஹாஜி மெகபூப், ஹபிஸ் அக்லக் ஆகியோர் மேல்முறையீடு செய்வார்கள். கருத்தொற்றுமை ஏற்பட்டால் முஸ்லிம் தனிநபர் சட்டவாரியமே மனுதாரராக இருக்கும் என்று ஜிலானி கூறியுள்ளார்.