tamilnadu

img

முல்லப்பள்ளியின் பேச்சுக்கு முஸ்லீம்லீக் எதிர்ப்பு

மலப்புறம்:
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவுக்கு எதிராக கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பேசிய வார்த்தைகளை தவிர்த்திருக்க வேண்டும் என யுடிஎப்பில் உள்ள முக்கிய கட்சியான முஸ்லீம்லீக் தெரிவித்துள்ளது.
கேரள சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜாவை ‘கோவிட் ராணி, நிபா ராஜகுமாரி’ எனவும் நிபா காலத்தில் கவுரவ நடிகை (கெஸ்ட்ஆர்ட்டிஸ்ட்) பாத்திரத்தையே அவர் வகித்ததாக வும் கேரள பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர்முல்லப்பள்ளி ராமச்சந்திரன் இழிவு படுத்தினார். அதற்கு எதிரான கருத்துகளை சமூக ஊடகங்கள்முதல் மலையாள மனோரமா போன்ற பிரபல நாளிதழ்கள் வரை தெரிவித்து வருகின்றன. 

முல்லப்பள்ளி பகிரங்கமாக மன்னிப்புகோர வேண்டும், அவரை மாநில  தலைவராக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைமை அது குறித்து வற்புறுத்த வேண்டும் என சிபிஎம் அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன்பிள்ளை கேட்டுக்கொண்டிருந்தார்.இந்நிலையில் கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யுடிஎப்) முக்கிய உறுப்புக் கட்சியான முஸ்லீம் லீக் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பி.ஏ.மஜீத் கூறுகையில், கேபிசிசி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கே.கே.சைலஜாவுக்கு எதிராக பயன்படுத்திய வார்த்தைகளை தவிர்த்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.  

;