tamilnadu

img

லடாக் பற்றி ஐ.நா.விலேயே பேசவைத்து விட்டாராம் மோடி!

புதுதில்லி, ஆக.19- ஜம்மு - காஷ்மீர் விவகாரம் ஐக்கிய நாடுகள் அவையில் விவா திக்கப்பட்டதை மிகப்பெருமை யாகவும், இது மோடியின் சாதனை யென்றும் பேசி, பாஜக எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளார். காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரம் என்பதும், இதில் உலக நாடுகள் தலையிட முடியாது என்ப தும்தான் இந்தியாவின் நெடு நாளைய அயலுறவுக் கொள்கை யாக இருக்கிறது. முன்னாள் பிரத மர் ஜவஹர்லால் நேரு, ஒருமுறை காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா சபைக்கு எடுத்துச் சென்றதை பாஜக-வினர் இன்றுவரை குற்றச்சாட்டாக பேசி வருகின்றனர். இந்நிலையில்தான், காஷ்மீர் விவகாரம் பற்றி, ஐக்கிய நாடுகள் அவையைப் பேச வைத்து விட்ட தாக, லடாக் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. நம்கியால் பெருமை யடித்து, சேம்சைடு கோல் போட் டுள்ளார். “பிரதமர் மோடி எடுத்த அதி ரடி நடவடிக்கையின் காரணமாக லடாக் பிரச்சனை தற்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் வரை எதிரொலித்துள்ளது. முந் தைய காங்கிரஸ் அரசுகளில் நாடா ளுமன்றத்தில் கூட லடாக் பிரச்ச னைகள் விவாதிக்கப்பட்ட தில்லை” என்று அவர் கூறியுள் ளார். நம்கியாலின் இந்த பேச்சு, பாஜகவினர் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது.

;