tamilnadu

img

பாரத் பெட்ரோலியத்தை விற்பதில் மோடி தீவிரம்... ரிலையன்ஸ் உள்பட 100 கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி

புதுதில்லி:
பொதுத்துறை நிறுவனமான பாரத்பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகளைதனியாருக்கு விற்கும் நடவடிக்கையில், மத்திய பாஜக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கு, அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட நூற்றுக்கும்மேற்பட்ட உள்நாட்டு - பன்னாட்டு நிறுவனங்கள் போட்டியிடும் நிலையில், விண்ணப் பங்கள் பெறுவதை ஜூலை 31-க்குள் முடித்து,அடுத்தகட்ட நடவடிக்கைகளை துவங்க அரசு முடிவு செய்துள்ளது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (Bharat Petroleum Corporation Ltd- BPCL)இந்தியாவிலேயே மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு - சந்தைப்படுத்துதல் நிறுவனமாகும். லாபமீட்டும் நிறுவனமாகவும் இது உள்ளது. ரூ. 85 ஆயிரத்து 316 கோடி சந்தை மூலதன மதிப்பு கொண்ட இந்த நிறுவனத்தின் 53.3 சதவிகித பங்குகளை மத்திய அரசுதன்னிடம் வைத்திருக்கிறது. இதன் மதிப்புசுமார் ரூ.45 ஆயிரத்து 200 கோடி ஆகும்.இந்நிலையில், தன்வசமுள்ள பங்குகளைத் தான் தனியார் முதலாளிகளுக்கு விற்க முடிவு செய்துள்ளது. அதாவது 53.3 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் தனியாரிடம் விட்டு விடுவதுதான் மோடி அரசின் திட்டமாகும்.

இதற்கான அறிவிப்புகளை ஏற்கெனவே மோடி அரசு வெளியிட்டுள்ள நிலையில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை வாங்குவதற்கு உள்நாட்டு - பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டியில் இறங்கியுள்ளன. சுமார் 100 நிறுவனங்கள் பாரத் பெட்ரோலியம் குறித்த தகவல்களை அரசிடம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் துவங்கி, சவூதி அரேபியாவைச் சேர்ந்த சவூதி அராம்கோ, ஐக்கிய அரபுஅமீரகத்தை சேர்ந்த அபுதாபி நேஷனல் ஆயில் கோ, ரஷ்யாவை சேர்ந்த ரோஸ்னெப்ட், அமெரிக்காவைச் சேர்ந்தஎக்ஸான் மொபில் உள்ளிட்ட மிகப்பெரியபன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் கூட பாரத் பெட்ரோலியம் விற்பனைக் கான ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன.இதனால், பாரத் பெட்ரோலியம் ஏலத்தில் பங்கேற்கும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களின் விண்ணப் பங்களை சமர்ப்பிக்க ஜூலை 31 கடைசி தேதி என்று மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. இந்த காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை எனவும் கறாராக முடிவு எடுத்துள்ளது.

;