tamilnadu

img

டிஸ்கவரி டி.வி.யில் வரும் சாகச நிகழ்ச்சியில் மோடி!

புதுதில்லி:
டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மனிதனும் காடும்’ (Man vs Wild) நிகழ்ச்சி உலகம் முழுவதும் பிரபலமானதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்-ம் பெரும்புகழ் பெற்றவர். யாரும் செல்லாத காட்டுக்குள் சென்று பயணம் செய்வது, பாலைவனத்தில் நடப்பது, தண்ணீரில் குதிப்பது என்று அவரின் சாகசம் பிரமிக்க வைக்கும்.இந்நிலையில், பியர் கிரில்சின் சாகச நிகழ்ச்சியில், இந்தியப் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ட்ரெய்லரை ‘பியர் கிரில்ஸ்’ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி ஆகஸ்ட் 12-ஆம் தேதி இரவு 9 மணிக்கு பிரதமர் மோடி கலந்து கொண்ட சாகச நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா-ம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

;