tamilnadu

img

பெருமுதலாளிகளுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு, ஏழைகள் தலையில் கை வைக்கும் மோடி அரசு... வளர்ச்சித் திட்ட நிதியில் ரூ.2 லட்சம் கோடி வெட்டு?

புதுதில்லி:
நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மோடி அரசு கைகழுவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.2019-20 நிதியாண்டில் ரூ. 24 லட்சத்து 60 ஆயிரம் கோடியை மொத்தவரி வருவாயாக ஈட்டுவதற்கு, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது. இதில் ஜிஎஸ்டி இழப்பீடு போன்றவை தவிர்த்து, மத்திய அரசுக்கு ரூ. 16 லட் சத்து 50 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப, 2019-20 நிதியாண்டுக் கான பட்ஜெட்டில், வளர்ச்சி திட்டங்களுக்கான செலவினம் என்ற வகையில்,ரூ. 27 லட்சத்து 86 ஆயிரம் கோடியை ஒதுக்கியிருந்த மத்திய அரசு, நிதிப்பற்றாக்குறை அளவை 3.3 சதவிகிதத்திற் குள் கட்டுப்படுத்தவும் இலக்கு வைத்திருந்தது.இதனிடையே, ஏப்ரல் முதல் நவம்பர்வரைக்கு உள்ளாகவே 65 சதவிகித நிதி செலவிடப்பட்டு விட்டது. மறுபுறத்தில் எதிர்பார்த்த வரி வருவாயையும் மோடிஅரசால் திரட்ட முடியவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கியிடமிருந்து ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் கோடியை, உபரி நிதி என்ற பெயரில் மத்திய அரசு வலுக்கட்டாயமாக பறித்தது. ஆனால், அதனை வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்குப் பதில், பெருமுதலாளிகளுக்கு கார்ப்பரேட் வரிச் சலுகை என்ற பெயரில், ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் கோடியை அள்ளிக்கொடுத்தது. உண்மையில் இந்த 1 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் கஜானாவுக்கு வர வேண்டியது. ஆனால், மோடி அரசு அதை முதலாளிகளுக்கு ‘தானம்’ வழங்கியது.

இவ்வாறு செய்துவிட்டு, தற்போது அரசுக்கான வரி வருவாயில் ஒட்டுமொத்தமாக ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை என்று கணக்கு காட்டியுள்ளது.மேலும், இதனை சரிக்கட்டுகிறோம் என்ற பெயரில், நடப்பு நிதியாண்டின் எஞ்சிய மாதங்களில் ரூ. 2 லட்சம் கோடி வரையில் செலவுகளைக் குறைக்க தற்போது முடிவெடுத்துள்ளது. அதாவது, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக் கான நிதி ஒதுக்கீட்டில் சுமார் 2 லட்சம்கோடி ரூபாயை வெட்ட முடிவு செய்துள்ளது. இது நடப்பாண்டிற்கு திட்டமிடப் பட்டிருந்த செலவினத் தொகையில் 7 சதவிகிதமாகும்.நிதிப்பற்றாக்குறை இலக்கை 3.8 சதவிகிதமாகவும் உயர்த்தவும் திட்டமிட்டுள்ள மோடி அரசு, இந்தப் பற்றாக் குறையைச் சமாளிக்க ரூ. 30 ஆயிரம் கோடி முதல் ரூ. 50 ஆயிரம் கோடி வரையில் கடன் வாங்குவதற்கும் யோசித்துவருகிறது. அரசுத் துறைகள் இந்த ஆண்டில் தங்களது செலவுகளை 25 சதவிகிதம் வரையில் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

;