tamilnadu

img

ஜோதிடர்களைப் போல பேசி மக்களை முட்டாளாக்கும் மோடி... கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கடும் தாக்கு

பெங்களூரு:
பிரதமர் மோடி தனது தோல்விகளை மறைக்க, மக்களை முட்டாளாக்க முயற்சிக்க வேண்டாம் என்று கர்நாடக முன்னாள்முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை யொன்றை சித்தராமையா வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கொரோனா பாதிப்பு அதிகரிக்க மக்களின் அலட்சியம் காரணம் அல்ல, மத்திய- மாநில அரசுகளின் தோல்வியே காரணம். இதற்காக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி முதலில் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால், நாட்டு மக்களுக்கு அறிவுரை என்ற பெயரில் தனது தோல்விகளை மோடி மூடிமறைக்கப் பார்க்கிறார்.கொரோனா நெருக்கடி காலத்தில் மத்திய அரசு அறிவித்த ரூ. 20 லட்சம் கோடிதொகுப்பு நிதி உதவி யார்-யாருக்கு வழங்கப்பட்டுள் ளது, பிஎம்- கேர்ஸ் நிதியத்திற்கு வந்த நன்கொடை எவ்வளவு, என்னென்ன பணிகளுக்கு அது செலவு செய்யப்பட்டுள்ளது, என்பதை யெல்லாம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரி விக்காதது ஏன்?ஒரு பிரதமர், கொரோனா வைரசை ஒழிக்க அறிவியல் பூர்வமான காரணங்களை கூறுவதை விட்டு, ஜோதிடர்களைப் போல பேசிக் கொண்டிருந்தால், மக்கள் முட்டாள்கள் ஆகாமல் வேறு என்ன ஆவார்கள்?

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நெருக்கடியில் சிக்கியுள்ள மக்களுக்கு மத்திய அரசு இதுவரை என்ன செய்துள்ளது, இனி என்ன செய்யப்போகிறது என்பதைத்தான் பிரதமர் மோடி தனது உரையில் விளக்கி இருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் அறிவுரைகள் கூறிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு சித்தராமையா விமர்சித்துள்ளார்.