tamilnadu

img

மோடி ஆட்சியில் கார் விற்பனை 20 சதவிகிதம் வீழ்ச்சி... இன்னும் 6 மாதங்களுக்கு வளர்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை

புதுதில்லி:
பாஜக ஆட்சியில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் கார் உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.இந்தியாவின் பிரபல கார் நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனமும்,விற்பனை வீழ்ச்சியால், பெரும் தேக்கத்தை சந்தித்தது. ஹரியானாவின் குருகிராம் மற்றும் மனேசரில்உள்ள தனது தொழிற்சாலைகளுக்கு மாருதி சுசூகி விடுமுறையும் அறிவித்தது. கடந்த செப்டம்பர் காலாண்டுடன்முடிவடைந்த முதல் பாதியில், மாருதி சுசூகியின் ஒட்டுமொத்த விற்பனை 25 சதவிகிதம் வீழ்ச்சி கண்டிருந்தது. அதன்பின்னரும் தேக்கநிலையில் பெரிதாக மாற்றமில்லை. நிறுவனத்தின் பங்குகள் 50 சதவிகித அளவிற்கு வீழ்ச்சி அடைந்ததால், மாருதி தனது விற்பனை இலக்கை குறைத்துக் கொண்டது.இந்நிலையில் மாருதி சுசூகியின் இந்தியாவிற்கான தலைமை அதிகாரி ஆர்.சி. பார்கவா ஆங்கிலநாளிதழுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “மாருதி சுசூகியின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது உண்மைதான். எல்லா நிறுவனங்களுக்கும் இதே நிலைமைதான். கடந்தமாதம் பண்டிகை என்பதனால் ஓரளவு விற்பனையாகியுள்ளது. அக்டோபர் மாத விற்பனை 4.5 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது.ஆனால், மத்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கும் பி.எஸ் - 6 விதிகளினால் அடுத்து வரும் 5 - 6 மாதங்களுக்கு வளர்ச்சி மிக மோசமாகத்தான் இருக்கும். இந்தியாவின் பொருளாதார நிலைமையில் பெரிய மாற்றம் இருக்கும் என நினைத்தேன். ஆனால், அது கார் விற்பனையில் 20 சதவிகித அளவிற்கு வீழ்ச்சியைஏற்படுத்தும் என நான் நம்பவில்லை. குறிப்பாக சிறு கார்களின் விற்பனை 53 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. நிலவி வரும் மந்த நிலையால் மாருதி சுசூகி நிறுவனம் பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகி இருக்கிறது.” என்று பார்கவா புலம்பியுள்ளார்.

;