tamilnadu

img

துயரத்தின் பிடியில் புலம்பெயர் தொழிலாளர்கள் : கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் வேலைவாய்ப்பை அனைவருக்கும் விரிவுபடுத்துக!

புதுதில்லி:
மோடி அரசின் தேச விரோத, மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து, கூட்டுப் போராட்டங்களை அதிகரிப்பதுஎன்று ஜுன் 3 அன்று கூடிய மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டம் முடிவெடுத்து, ஜூலை3 அன்று அகில இந்திய எதிர்ப்பு தினம் அனுசரிக்குமாறு அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. 

இதுதொடர்பாக, சிஐடியு அகில இந்தியத் தலைவர் டாக்டர் கே.ஹேமலதா, பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏட்டில் எழுதியுள்ள கட்டுரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:


மே 30, 2020 அன்று சிஐடியு 50 ஆண்டுகளை நிறைவு செய்தது.  சுரண்டலுக்கெதிரான 50 ஆண்டு கால தியாகங்கள் மற்றும் போராட்டங்களை நினைவு கூர்ந்து தொழிலாளி வர்க்கம் மேலும் ஒன்றுபட்ட போராட்டங்களை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை, சிஐடியு பொன்விழா மேலும் உணரச் செய்திருக்கிறது. தத்துவார்த்த ரீதியாக, அரசியல் ரீதியாக ஒன்றுபட்ட போராட்டங்களை வளர்த்தெடுக்க வேண்டிய அவசியம் இந்நிகழ்வுகளில் வலி யுறுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த வகையில் இந்தஅமைப்பு தினத்தை அனுசரிக்க முடியவில்லை. முன்னதாக, மே 15,2020 அன்று கூடிய சிஐடியு அகில இந்திய மைய செயலகத்தின் கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

u ஊரடங்கு காலக்கட்டத்தில் இந்நாட்டின் தேசவளத்தை உருவாக்கிய, இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உருவாக்கிய அனைத்துத் தொழிலாளர்களும் கடுமையான துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.  குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களும், அமைப்புசாரா தொழிலாளர்களும் அதிகமான துன்ப துயரங்களுக்கு ஆளாகின்றனர்.

u அதேபோல மோடி அரசாங்கம் ஏற்கனவே தனது நிகழ்ச்சி நிரலில் வைத்திருந்த முடிவின் படி தொழிலாளர்களுக்கு இருக்கின்ற சட்ட ரீதியான பாதுகாப்புகள் அனைத்தையும் இந்த ஊரடங்கு காலக்கட்டத்தில் நீக்கும் நடவடிக்கைகளை வெகு தீவிரமாக எடுத்து வருகிறது.  அதே நேரத்தில் கேரள அரசாங்கம் மிகத்தீர்மானகரமாக, தொழிலாளர் விரோத முடிவுகளை எடுப்பதில்லை என்று முடிவெடுத்துள் ளது.

u காங்கிரஸ் உள்பட பல்வேறு முக்கிய அரசியல்கட்சிகளும் பாஜகவின் இந்த தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்க்கவில்லை. இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே தொழி லாளர்களின் பக்கம் நிற்கின்றன. 

u தேசியப் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் மூலம் மாநில அரசாங்கங்களை கட்டுப்படுத்துவது, சிவில் உரிமைகள், கருத்துரிமை களை நசுக்குவது மற்றும் அனைத்து குடி மக்களையும் கண்காணிப்பில் வைப்பது போன்றவற்றை அரங்கேற்றி மோடி அரசு வருகிறது.  

uஆளும் வர்க்கங்கள், ‘இப்போதில்லை யென்றால் எப்போதுமில்லை’ என்ற வேட்கையுடன் இந்த ஊரடங்கு காலக்கட்டத்தை பயன்படுத்திக் கொண்டு நவீன தாராளவாதக் கொள்கைகளை இன்னும் அதி வேகமாகநிறைவேற்றி வருகிறது.  காட்டுமிராண்டித் தனமான, கொடூரமான முதலாளித்துவ அமைப்பு அதன் கோர முகத்துடன் மக்களின்முன் அம்பலப்பட்டு நிற்கிறது.

u தற்போது மக்களும், தொழிலாளர்களும் சந்திக்கின்ற அத்தனை பிரச்சனைகளையும் அரசின் கொள்கைகளுடனும் தொடர்புபடுத்தி, அதற்குப் பின்னால் உள்ள அரசியலை தொழிலாளர்களிடையே சிஐடியு கிளைகள், சங்கங்கள் அம்பலப்படுத்த வேண்டும்.

u ஆர்எஸ்எஸ்சின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரல் மற்றும் சூழ்ச்சிகளை குறித்த எச்சரிக்கையுடன் சிஐடியு அனைத்து மட்டங்களிலும் இருக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அக்கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் ஏராளமான நிவாரணப் பணிகளை சிஐடியு செய்துள்ளது.  உழைக்கும் மக்களை, சாமானிய மக்களை ஒருங்கிணைக்கும் போராட்ட அனுபவமும் இந்த காலக்கட்டத்தில் கிடைத்துள்ளது.  இன்னும் போராட்டங்களை கூர்மைப்படுத்திட வேண்டியுள்ளது.

மாதம் ரூ.7500 மற்றும் இலவச ரேசன் பொருட்களை 6 மாதங்களுக்கு புலம் பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கச் செய்வது, தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பினை விரிவுபடுத்துவது போன்ற கோரிக்கைகளுக்கான போராட்டத்தினை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.  இவற்றையெல்லாம் வலியுறுத்தி ஜூலை 3 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் எதிர்ப்பு தினம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு டாக்டர் ஹேமலதா கூறியுள்ளார்.

 பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் இருந்து (ஜுன் 7)
தொகுப்பு : ஆர்.எஸ்.செண்பகம்

;