tamilnadu

img

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் எப்பொழுது முடிக்கப்படும்?

புதுதில்லி: 
மதுரை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட பணிகளின் விவரங்களையும், நடைபெற்று வரும் பணிகளில் எந்தெந்த தலைப்பில் எவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டுள்ளது?அப்பணிகளின் தற்பொழுதைய விவரங்களையும் எப்பொழுது அப்பணிகள் முடிக்கப்படும் என்ற விவரங்களையும் அளிக்க வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  சு.வெங்கடேசன் எழுத்து மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.இக்கேள்விக்கு வீட்டு மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிபின்வரும் விவரங்களை பதிலாக அளித்துள்ளார்.

மதுரைக்கான ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்குரூ.196 கோடி நிதியினை மத்திய அரசு விடுவித்துள்ளது. இத்தொகையில் ரூ.156.81 கோடிதொகை செலவழிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பழ மார்க்கெட்டில் மேற்கொண்ட அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் மட்டும் ஏப்ரல் 2018ல் நிறைவடைந்துள்ளன.ரூ.49.89 கோடிக்கான பெரியார் பேருந்துநிலைய பணிகள் ஜுன் 2020 லும், ரூ. 30.71கோடிக்கான ராஜா மில் முதல் குருவிக்காரன் சாலை வரையிலான வைகை ஆற்றுக் கரையோர மேம்பாட்டு பணிகள் ஜனவரி 2020 லும் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளன.

மாநகருடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் டெண்டர் நிலையில் இருப்பதாகவும், ஜூன் 2021 க்குள் அப்பணிகளை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அப்பதிலில் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், ரூ.20.47 கோடி நிதியில் தற்பொழுதைய தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

;