tamilnadu

img

உயிர் பயத்தில் வாழும் முன்னாள் சிஆர்பிஎப் வீரர்... தில்லி வன்முறையில் தப்பி முகாமில் தஞ்சம்

புதுதில்லி:
நாட்டின் பாதுகாப்புக்காக, மத்திய ரிசர்வ் காவல்படையில், இருபத்து இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய தனக்கு, “இந்த நாட்டில் வாழ உரிமையில்லையா?” என்றுமுன்னாள் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் கேள்விஎழுப்பியுள்ளார்.மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) 22 ஆண்டுகளாக பணியாற்றி 2002-ஆம் ஆண்டில் தலைமைக் காவலராக ஓய்வு பெற்றவர் ஆயிஷ் முகம்மது(58). நாட்டின் பாதுகாப்புக்காக பணியாற்றியவரான ஆயிஷ் முகம்மது, தற்போது தனக்கும் தனது குடும்பத்திற் குமே பாதுகாப்பின்றி, தில்லி முஸ்தபாபாத்தின் ஈட்காவில் உள்ள தற்காலிக நிவாரண முகாமில் தஞ்சம் புகுந்துள்ளார். 

தில்லி பாகீரதி விஹார் அருகே ஆயிஷ் முகம்மதுவின் வீடு இருந்தது. பிப்ரவரி 25-ஆம் தேதி வன்முறையின்போது, அதனைசங்-பரிவாரங்கள் எரித்துவிட்டன. அதைத்தொடர்ந்தே நிவாரண முகாமில் அடைக்கலம் புகுந்துள்ள ஆயிஷ், “இந்தியாவில் வாழ எனக்கு உரிமை இல்லையா?” மிகவும் கவலையுடனும் வேதனையுடனும் கேள்வி எழுப்பியுள்ளார்.“அன்றைய தினம் வன்முறையாளர்கள் 200 முதல் 300 பேர் வரை வந்தனர். அவர்கள் கல் வீச்சு, துப்பாக்கிச்சூட்டில்ஈடுபட்டதோடு, வீட்டிற்கும் தீ வைத்தனர்.அப்போது, எனது மகனுடன் வீட்டிற்குள் தான் இருந்தேன். வெளியே செல்ல முடியாத நிலையில், மொட்டை மாடி வழியாகப் பக்கத்து வீட்டில் குதித்து நாங்கள்உயிர் தப்பினோம். மார்ச் 29 அன்று எனது சகோதரி மகளின் திருமணத்திற்காக நகைகள் வாங்கி வைத்திருந்தோம். அந்த நகைகள் அனைத்தையும் வன்முறையாளர்கள் திருடிச்சென்று விட்டனர். எனது வீட்டின் முதல் தளம் முற்றிலும் எரிந்து விட்டது. 2 இருசக்கர வாகனங்களையும் எரித்து விட்டனர்.

1991-இல் இருந்து மத்திய ரிசர்வ் காவல்படையில் பணியாற்றியுள்ளேன். காஷ்மீரிலும்கூட பணியாற்றியுள்ளேன். பணியின்போது நாட்டிற்காக பலமுறை படுகாயங்களையும் சந்தித்தவன் நான். ஆனால், என்மீது தற்போது நடத்தப்பட்ட தாக்குதல், இந்தியாவில் வாழ எனக்கு உரிமை இல்லை என்று சொல்வது போல உள்ளது” என்று கூறியுள்ளார். இது உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.தில்லியில் வன்முறைக் காடான பகுதிகளில், பாகீரதி விஹார் பகுதியும் ஒன்று.இங்குள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்துதான், 2 உடல்கள் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

;