tamilnadu

img

ரூ.1.5 லட்சம் கோடி பிரீமியம் வசூலித்து எல்ஐசி சாதனை... சொத்துமதிப்பு ரூ.32 லட்சம் கோடியைத் தாண்டியது

புதுதில்லி:
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation) எனப் படும் எல்ஐசி-யின், புதிய பிரீமிய வருவாய் முதல் முறையாக ரூ. 1 லட்சத்து50 ஆயிரம் கோடியைத் தாண்டி சாதனைபடைத்துள்ளதாக, அந்த நிறுவனத்தின்தலைவர் எம்.ஆர். குமார் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:எல்ஐசி நிறுவனம் புதிய வர்த்தக நடவடிக்கைகளின் மூலமாக 1.5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.முதல் முறையாக இந்த மைல்கல்லை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

மேலும், இதன்மூலம் எல்ஐசி நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு 77.61 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி எல்ஐசி நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 2 லட்சத்து 52 ஆயிரத்து 149 கோடியே 60 லட்சம் ரூபாயாக இருந்தது. இதுவே 2019-இன் செப்டம்பர் காலகட்டத்தில் 17.79 சதவிகிதம் அதிகரித்து 2 லட்சத்து 97 ஆயிரத்து 17 கோடியே 28 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.வருமானம் அதிகரித்ததால் எல்ஐசிநிர்வகிக்கும் சொத்துக்களின் மொத்த மதிப்பு 29 லட்சத்து 89 ஆயிரத்து 276 கோடியே 53 லட்சம் ரூபாயிலிருந்து- 7.92 சதவிகிதம் உயர்வு கண்டு- 32 லட்சத்து 25 ஆயிரத்து 905 கோடியே 42 லட்சம் ரூபாயைத் தொட்டிருக்கிறது.நடப்பு 2019-20 நிதியாண்டின் ஜனவரிமாத முடிவில் எல்ஐசி நிறுவனம், முதிர்ச்சியடைந்த 1 கோடியே 42 லட்சத்து 93 ஆயிரத்து 289 பாலிசிகளுக்கு 69 ஆயிரத்து 748 கோடி ரூபாய் வழங்கியுள் ளது. இறப்பு தொடர்பான இழப்பீடு கோரிவந்த 5 லட்சத்து 99 ஆயிரத்து 881 விண்ணப்பங்களுக்கு 9 ஆயிரத்து 866 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறது.இவ்வாறு எம்.ஆர். குமார் குறிப்பிட்டுள்ளார்.

;