tamilnadu

img

தேர்தல் உறுதிமொழி இருக்கட்டும் அரசியல் சாசன உறுதிமொழி என்ன ஆனது?

புதுதில்லி:
370-ஐ நீக்கியதன் மூலம், பாஜக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறது; ஆனால்,அரசியல் சாசனத்தை காப்போம் என்றவாக்குறுதியை அது மீறிவிட்டது என்றுஅகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி சாடியுள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தைநீக்கும் மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிலையில்,அதில் ஓவைசி இவ்வாறு கூறியுள்ளார்.“காஷ்மீர் தொடர்பான இந்த மசோதாவை நான் கடுமையாக எதிர்க்கிறேன். நீங்கள் உங்களது தேர்தல் அறிக்கையை நிறைவேற்றி இருக்கிறீர்கள். ஆனால், அரசியல் சாசனத்திற்கு அளித்த உறுதிமொழியை மீறிவிட்டீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், “370 ரத்து நிகழ்வை, ஒருதீபாவளிக் கொண்டாட்டம் என்கிறீர்கள் (மத்திய அரசு). அப்படியெனில்,அனைத்துக் காஷ்மீரிகளையும் விடுவிக்க வேண்டியதுதானே. அவர்களையும் இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாட அனுமதிக்கலாமே?” என்று கேள்வி எழுப்பியுள்ள ஓவைசி,மாறாக, “காஷ்மீர் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடக்கப்பட்டு உள்ளார்கள்; அவர்கள் மொபைல் போன்பயன்படுத்தக் கூட அனுமதிக்கப்படவில்லை” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

திங்கட்கிழமையன்று ஈத் பண்டிகை வருவதைச் சுட்டிக்காட்டியிருக்கும் ஓவைசி, “ஈத் பண்டிகை திருநாளில், ஆடுகளுக்குப் பதில், காஷ்மீரிகள் அவர்களையே தியாகம் செய்யவேண்டுமென அரசு விரும்புகிறதா?” என்றும், “அதுதான் அரசின் எண்ணம்எனில், அதையும் காஷ்மீரிகள் செய்வார் கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

;