tamilnadu

img

கொலைக்குற்ற வழக்கிலிருந்து குல்தீப் சிங் செங்கர் விடுவிப்பு

புதுதில்லி:
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவில்சிறுமி ஒருவர், 2017-ஆம் ஆண்டு ஜூன்மாதம் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக் கப்பட்டார். இச்சம்பவத்தில், பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் உட்பட பலர் கைது செய்துசிறையில் அடைக்கப்பட்டனர்.இதனிடையே, இந்த வழக்கு தொடர் பான விசாரணைக்காக, கடந்த 2019 ஜூலை 28-ஆம் தேதி, ரேபரேலி மாவட் டத்தில், பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது வழக்கறிஞர், உறவினர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களின் கார்மீது லாரி ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் இளம்பெண்ணின் தாயாரும், உறவினரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இளம்பெண், அவரது வழக்கறிஞர் ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர்.இந்த விபத்து செங்கார் உள்ளிட்டவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றச் சாட்டுக்களை முன்வைத்ததால், இதுகுறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், கொலைமுயற்சி வழக்கில் தனது முதல் குற்றப்பத்திரிகையை தற்போது சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சிபிஐ,விபத்தை ஏற்படுத்தி கொலைச்சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டிலிருந்து குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டோரை விடுவித்துள்ளது. விபத்தைஏற்படுத்திய லாரி ஓட்டுநர் ஆசிஷ் குமார் பாலின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. விபத்து நேரிட்டதில் குற்றச்சதி ஏதுமே இல்லை என்றும் சிபிஐயின் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.