tamilnadu

img

மாநில மொழிகளில் தீர்ப்புகள் தமிழுக்கு அநீதி!

புதுதில்லி:
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் ஆறு மாநில மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாத இறுதியில் உச்ச 
நீதிமன்ற தீர்ப்புகள் இந்தி, தெலுங்கு, அசாமி, கன்னடம், மராத்தி, ஒடியாஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படு கிறது. இதற்காக, உச்ச நீதிமன்றத்தின் மின்னணு மென்பொருள் பிரிவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மென்பொருளை பயன்படுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் மிகவும் மூத்த மொழியும் உயர்தனிச் செம்மொழியுமான தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆங்கிலம் பேசாத வர்களும் தீர்ப்புகளை படிக்க வழிவகை செய்ய வேண்டிய தேவையை 2017 ஆம் ஆண்டில் கொச்சியில் நடைபெற்ற மாநாட்டில் குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார். அப்போதிலிருந்தே தீர்ப்புகளை மாநில மொழிகளில் வெளியிடுவதற்கான பணிகளை தலைமை நீதிபதி  தொடங்கிவிட்டார். இதன் முதற் கட்டமாக, உச்சநீதிமன்றத்திற்கு வரும் மேல்முறையீடுகளின் எண்ணிக்கை யின் அடிப்படையில் மேற்கூறிய ஆறுழிகளும் தேர்வு செய்யப்பட் டுள்ளன.

அடுத்தடுத்த கட்டங்களில் இதர மாநில மொழிகளிலும் தீர்ப்புகள் வெளியிடப்படும். வழக்கறிஞர்களின் உதவியை தேடாமலேயே உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சாமானிய மக்களும் எளிதில் புரிந்துகொள்ள உதவி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இதுகுறித்து உச்ச நீதிமன்ற அலுவலர் ஒருவர் இந்துஸ் தான் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகை யில், “வழக்கு தொடுப்பவர்கள் நீதி மன்றத்தின் தீர்ப்புகளை தங்களின் சொந்த மொழியில் வழங்கும்படி உச்ச நீதிமன்ற அலுவலகத்திற்கு தொடர்ந்து வருகின்றனர். வழக்கு தொடுப்பவர்கள் அனைவரும் ஆங்கிலம் பேசுவோர் அல்ல. ஆகையால் மாநில மொழிகளி லும் தீர்ப்புகளை வெளியிட நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

தீர்ப்புகள் ஆங்கிலத்தில் உடனேவழங்கப்பட்டாலும், மொழிபெயர்க்கப் பட்ட தீர்ப்புகள் ஒருவாரம் கழித்தே வெளியாகும். தனிநபர் வழக்குகள், சிவில் வழக்குகள், குற்ற வழக்கு கள், திருமண விவகாரங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆரம்பகட்டமாக முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை தமிழிலும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மக்களவை யில் விசிக எம்.பி ரவிக்குமார் கவனஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார். ரவிக்குமார் புதனன்று (ஜூலை 3) தமது ட்விட்டர் பக்கத்தில், “உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை இந்தி, தெலுங்கு, அசாமி, ஒடியா, தெலுங்கு, கன்னடம் ஆகிய மாநில மொழிகளிலும் வெளியிடுவதென்று உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ள நிலையில் செம்மொழியான தமிழ் இந்தப் பட்டி யலில் விடுபட்டிருப்பது அநீதி” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இதுதொடர்பாக அவர் மக்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவருவதற்காக அளித்துள்ள நோட்டீசில் “உச்சநீதி மன்றத் தீர்ப்புகளை இந்தி மற்றும் 5 பிராந்திய மொழிகளில் மொழி
பெயர்த்து வெளியிட முடிவுசெய்யப் பட்டுள்ளது. உயர் நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப்படும் வழக்கு களை அளவுகோளாக வைத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
ஆனால், இந்த பட்டியலில் தமிழுக்கு இடமளிக்கப்படவில்லை. அதேநேரத்தில் தென்னிந்திய மொழிகளான கன்னடம், தெலுங்கு ஆகியவை இடம்பெற்றுள்ளன. செம்மொழியான தமிழ் விடுபட்டிருப்பது அநீதியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

;