tamilnadu

img

ஜெட்லி, உமாபாரதி, வசுந்தரா வெளியேறுகின்றனர்..

புதுதில்லி:
பாஜக-வின் நாடாளுமன்றக் குழு தலைவராக, நரேந்திர மோடியை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனிக்கிழமையன்று முறைப்படி தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து, மே 30-ஆம் தேதி இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கிறார்.

இதனிடையே, நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில், கடந்த முறை அமைச்சர்களாக இருந்த அருண் ஜெட்லி, உமாபாரதி உள்ளிட்டோருக்கு இடம் கிடைக்காது என்றும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா மற்றும் மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோருக்கு புதிதாக வாய்ப்பு கிடைக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நிதின் கட்காரிக்கு பழையபடி சாலைப்போக்குவரத்துத் துறையும், ஸ்மிருதி இரானிக்கு மனிதவள மேம்பாடு மற்றும் ஜவுளித்துறையும், மாலேகான் குண்டுவெடிப்பு சாமியார் பிரக்யா சிங் தாக்கூருக்கு, உமாபாரதி வகித்துவந்த குடிநீர் வடிகால் துறை அமைச்சர் பதவியும் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதேபோல பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும், குறிப்பாக, பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தபோதுதான், அமித்ஷா ஏராளமான போலி என்கவுண்ட்டர்களை நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

;