தில்லி தேர்தல் குறித்து உத்தவ் தாக்கரே கருத்து
மும்பை, பிப்.12- தில்லி சட்டப்பேரவைத் தேர் தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், ‘மன் கி பாத்’தை ‘ஜன் கி பாத்’ (மனத்தின் குரலை மக்களின் குரல்) வென்றுவிட்டது என்று சிவசேனா கட்சித் தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே வர்ணித் துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:- தில்லியில் ஒரு அரசாங்கம் (மத்திய பாஜக அரசு) தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற முழு அரசு இயந்தி ரத்தையும் பயன்படுத்தியது. ஆனால், துடைப்பத்தின் முன்பு அது தோல்வி அடைந்துவிட் டது. அரசியல் எதிரிகள் அனை வரும் தேசவிரோதிகள். தாங் கள் மட்டும் நாட்டை நேசிப்ப வர்கள் என்ற மாயையில் சிலர் (பாஜகவினர்) இருந்தனர். கெஜ்ரிவாலை ஒரு பயங்கர வாதி என்று அழைத்தனர். அத்த கையவர்களுக்கு உரிய இடம் என்ன, என்பதை தில்லி மக்கள் காட்டிவிட்டனர். தில்லியில் உள்ளூர் பிரச்ச னைகளில் கவனம் செலுத்துவ தற்குப் பதிலாக, சர்வதேசப் பிரச்சனையைக் கொண்டு வந்து, மக்களின் மனத்தை மாற்ற பாஜகவினர் முயன்றனர். ஆனால் அது நடக்கவில்லை. தில்லியில் ‘மன் கி பாத்’ துக்கு (பிரதமர் மோடி நடத்தும் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி) பதிலாக ‘ஜன் கி பாத்’ தை (மக்களின் குரலை) மக்கள் வெற்றி அடைய செய்து உள்ள னர். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.