tamilnadu

img

ஏழைகள் கையில் பணம் வழங்குவதே சிறந்தது!

புதுதில்லி, மே 5- மக்கள் கைகளில் பணத்தைக் கொடுங்கள்; கெடுதல் ஏதும் நடக் காது; பொருளாதாரத்தை ஊக் கப்படுத்த இதுதான் சிறந்த வழி என நோபல் பரிசாளர் அபிஜித் பானர்ஜி தெரிவித்தார். இந்திய-அமெரிக்க பொருளா தார வல்லுநரான பானர்ஜி, 2019 ஆம் ஆண்டுக்கான பொருளாதா ரத்திற்கான நோபல் பரிசையும், மஸ்ஸாசூஸெட்ஸ் தொழில்நுட் பக் கழகத்தின் எஸ்தர் டஃப்லோ மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழ கத்தின் மைக்கேல் கிரெமரையும் சேர்த்து “உலகளாவிய வறுமை யை ஒழிப்பதற்கான” ஆய்விற் காக நோபல் பரிசு பெற்றார்.

அவர் செவ்வாயன்று காங்கி ரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறிய கருத்துக்கள் வரு மாறு:- பொருளாதாரத்தை வளர்க் சிப் பாதைக்குக் கொண்டுவர வேண்டும், ஊக்கப்படுத்த வேண் டும் என இந்திய அரசு நினைத்தால் ஊரடங்கு முடிந்தபின் ஏழை மக்க ளின் கைகளில் 60 சதவீதம் பணம் வழங்க வேண்டும். இதனால் எந்தத் தீங்கும் நேராது.60 சதவீதம் பணம் அவர்களுக்கு கிடைக்கும் என்பதையும் உத்தரவாதப்படுத்த வேண்டும். மக்கள் கைகளில் பணத்தைக் கொடுத்து செல விடச் சொல்ல வேண்டும். அது தான் பொருளாதாரத்தை ஊக்கப் படுத்த சிறந்த வழி. 

அடுத்த ஆறு மாதங்களுக்கு அனைவருக்கும் தற்காலிக ரேசன் கார்டுகள் வழங்க வேண்டும். குறிப்பாக அரிசி, கோதுமை மக்களுக்குக் கிடைப் பதை அது உறுதிப்படுத்தும்.  குறிப்பாக மாநில அரசுகளு க்கு உரிய பண உதவியை மத்திய அரசு செய்ய வேண்டும். அந்தப் பணம் வீணடிக்கப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்தி ரூ.200 லட்சம் கோடி ஆகும். இதிலிருந்து ஏழை களுக்கு ஒரு சிறிய தொகையே செலவிடப்படுகிறது. கடும் நெருக் கடியான காலத்தில் தைரியமாக இருப்பதுதான் ஒரே வழி. கொரோனா வைரஸ் தாக்கு தலால் பலர் பாதிக்கப்பட்டுள்ள னர். ஊரடங்கை தளர்த்துவதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண் டும்.

ஊரடங்கிற்குப் பின்னால் நாட் டில் ஏற்பட உள்ள பொருளாதார மறுமலர்ச்சி குறித்து இந்தியா நம் பிக்கையுடன் இருக்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர் களின் வாழ்நிலையை மாநில அரசு மட்டும் மாற்றிவிட முடி யாது. இது குறித்த பதற்றம் மாநில அரசுகளிடம் உள்ளது. புலம் பெய ர்ந்த தொழிலாளர் வாழ்நிலையை மாற்ற மத்திய அரசும் உதவி செய்ய வேண்டும். ஒட்டுமொத்த பொருளாதார மறுமலர்ச்சிக்கு பிந்தைய நிலை குறித்து இந்தியா நம்பிக்கை யுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அபிஜித் பானர்ஜி கூறினார்.