tamilnadu

img

பீகாரிலும் டிரெண்ட் ஆனது  ‘கோபேக் மோடி’ ... அதிர்ச்சியில் மோடி-நிதிஷ்-பாஜக 

பாட்னா:
பிரதமர் மோடியின் பீகார் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைதளங்களில் கோபேக் மோடி  (#GoBackModi ) என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது.இதனால் பிரதமர் மோடி, இக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ்குமார் மற்றும் பாஜக, ஜக்கிய ஜனதா தளம் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பீகார் சட்டமன்றத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அக்டோபர் 23 அன்று  பீகாரில் பிரதமர் மோடி,காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள், கருப்பு பணம் மீட்புஉள்ளிட்ட பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையும் கடந்த 6 ஆண்டுஆட்சிக்காலத்தில் நிறைவேற்றாததால் இளைஞர்களும் மக்களும்கடும் கோபத்தில் உள்ளனர். தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காகத்தான் இலவச கொரோனா தடுப்பூசி அறிவிப்பையும் பாஜக வெளியிட்டுள்ளது. அப்படியெனில் மற்ற மாநிலங்களில் கொரோனாதடுப்பூசிக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுமா என்று அரசியல் கட்சியினரும் மக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.  இந்நிலையில் பீகாரில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து  #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிவிட்டர் வலைதளத்தில் அக்டோபர் 23 அன்று டிரெண்டிங் ஆனது. இந்த ஹேஷ்டேக் பக்கத்தில் பீகார் இடம்பெயர் தொழிலாளர்கள் அவலம் குறித்த பதிவுகளும்  கடந்த காலங்களில் பிரதமர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதை சுட்டிக்காட்டும் பதிவுகளும் இடம்பெற்றுள்ளன.  பீகாரில் தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மைக்கு என்ன தீர்வு காணப்பட்டது என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.