சாலையில் படுத்துறங்கிய அவலம்
கோவை, பிப்.22– ஜக்கி வாசுதேவ் நடத்திய ஈஷாவின் சிவராத்தி நிகழ்விற்கு பாதுகாப்பிற்காக வந்த காவல்துறை யினருக்கு உரிய ஏற்பாடு செய்யப்படாததால் சாலை யோரத்தில் படுத்துறங்கிய அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பேரூரையடுத்த ஈஷா யோகா மையத்தில் வெள்ளியன்று சிவராத்திரி விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்றவர்களிடம் நன்கொடை என்ற பெயரில் பெரும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. குறிப்பாக, வரிசை வாரியாக கங்கா 50 ஆயிரம் ரூபாய், யமுனா ரூ.20 ஆயிரம், நர்மதா ரூ. 5 ஆயிரம், கோதாவரி ஆயி ரம் ரூபாய் மற்றும் காவிரி 500 ரூபாய் என ஆற்றின் பெயர்களை வரிசைப்படுத்தி கட்டண வசூல் நடை பெற்றது. அதேநேரம், கட்டணம் செலுத்தாதவர்கள் கட்டாந்தரையில் அமர வைக்கப்பட்டனர். முன்னதாக, அனைத்து தொலைக்காட்சி விளம்பரங்களிலும் இல வசம் என அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்த சோகம் ஒருபுறமிருக்க, பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினருக்கும் எந்த ஏற்பாட்டையும் செய்யாத தால் இவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, இந்த சிவராத்திரி நிகழ்விற்கு துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு வந்ததையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயி ரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்காக வர வழைக்கப்பட்டனர். வந்தவர்களிள் ஒரு பகுதியினர் சாலையின் ஓரத்திலும், இதர போலீசார் நிகழ்வு நடை பெறும் இடத்திலும் நிற்கவைக்கப்பட்டனர். இப்படி வரவழைக்கப்பட்ட போலீசாருக்கு உணவு, தண்ணீர் உள்பட ஏதும் வழங்கப்படவில்லை. மேலும் சாலை யின் இருபுறத்திலும் நிற்கவைக்கப்பட இந்த காவ லர்களுக்கு தங்குவதற்கான எந்த ஏற்பாடும் செய்யப் படவில்லை. இதன்காரணமாக விடிய விடிய காவல் காத்த போலீசார் விடியற்காலையில் வேறுவழியின்றி சாலை யிலேயே படுத்துறங்கினர். இந்த காட்சியை கண்ட பொது மக்கள், பெரிய மனிதர்களின் பாதுகாப்பிற்காக வர வழைக்கப்பட்ட காவலர்களுக்கு உரிய ஏற்பாட்டை செய்து தராமல் இப்படி சாலையில் படுக்க வைப்பதை கண்டு முகம் சுழித்தனர். மேலும் ஜக்கியின் வசூல் வேட்டைக்கு இப்படி அப்பாவி காவலர்களை அலைக்கழிக்க வைப்பது எந்த வகையில் நியாயம் என்கிற கேள்வி யையும் எழுப்பிச் சென்றனர்.