tamilnadu

img

அரசியலமைப்புக்கு முரணாக உள்ளது....குடியுரிமை மசோதாவை திரும்பப் பெறுக!

புதுதில்லி:
“குடியுரிமைச் சட்ட (திருத்த) மசோதா 2019- என்பது பாரபட்சமானது; மக்களைப் பிளவுபடுத்தக் கூடியது; அரசியலமைப்பிற்கு முரணானது” என்று ஓய்வுபெற்ற நீதிபதிகள், வரலாற்று ஆய்வாளர்கள், பொருளாதார அறிஞர்கள், எழுத்தாளர்கள், திரைக்கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மசோதாவை திரும்பப் பெறுமாறு, 600-க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு, மத்திய அரசுக்கு கடிதம்ஒன்றையும் அவர்கள் எழுதியுள்ளனர்.வரலாற்று ஆய்வாளர்கள் ரொமிலா தாப்பர், ராமச்சந்திர குஹா,பொருளாதார அறிஞர் பிரபாத் பட் நாயக், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஏ.பி.ஷா, யோகேந்திர யாதவ், ஜி.என்.தேவி, நந்தினி சுந்தர் மற்றும் வஜாஹத் ஹபிபுல்லா, எழுத்தாளர்கள் நயன்தாரா சாகல், அருந்ததி ராய் மற்றும் அமிதவ் கோஷ், டி.எம். கிருஷ்ணா, சுதிர் பட்வர்தன் மற்றும் நீலிமா ஷேக் போன்ற கலைஞர்கள், அபர்ணா சென், நந்திதா தாஸ், ஆனந்த் பட்வர்தன் உள்ளிட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள், அறிஞர்கள் தீஸ்தா செதல்வாட், ஹர்ஷ் மந்தர், அருணா ராய்மற்றும் பெஸ்வாடா வில்சன் உள்ளிட்டோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

“இந்தியாவின் அரசியலமைப்பு ‘பாலினம், சாதி, மதம், வர்க்கம், சமூகம் அல்லது மொழி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் சமத்துவத்தின் அடிப்படைகளை வலியுறுத்துகிறது’. ஆனால், குடியுரிமைச் சட்ட (திருத்த) மசோதா மற்றும் நாடு தழுவிய என்.ஆர்.சி (தேசிய குடிமக்கள் பதிவேடு) ஆகிய இரண்டும், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு சொல்லமுடியாத துன்பத்தை கொண்டு வருபவையாக உள்ளன. இது இந்தியகுடியரசின் தன்மையை, அடிப்படையை சரிசெய்யமுடியாத அளவிற்கு சேதப்படுத்தி விடும்.அதனால்தான் மனசாட்சியுள்ள அனைத்து குடிமக்களும், அரசு இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அரசியலமைப்புக்கு இந்த அரசு துரோகம் செய்யக் கூடாது என்று கோரிக்கை வைக்கிறார்கள்” என்று கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

;