tamilnadu

img

தொழில், உற்பத்தி, சேவை ஆகிய 3 துறைகளும் அடிவாங்கின... ஒட்டுமொத்தமாக ஜிவிஏ 22.8 சதவிகிதம் சரிவு....

புதுதில்லி:
2020 - 21 நிதியாண்டின் முதல்காலாண்டில் இந்தியாவின் தொழிற்துறை, உற்பத்தித் துறை, சேவைத்துறை ஆகிய மூன்றுமே கடுமையாக அடிவாங்கியிருக்கின்றன.இந்த துறைகளில் வளர்ச்சியைக் கணக்கிடுவதற்கு பயன் படும் ஜிவிஏ, ஒட்டுமொத்தமாக 22.8 சதவிகிதம் வீழ்ச்சி கண் டுள்ளது.

2020-21 நிதியாண்டின் முதல்காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) இந்தியாவின் ஜிடிபி மைனஸ் 23.9 சதவிகிதம் அளவிற்கு சரிவைச் சந்தித்து உள்ளது. இது,ஜிடிபி தரவுகளை வெளியிடத் துவங்கிய கடந்த 1996-ஆம் ஆண் டிலிருந்து இதுவரை ஏற்படாத மிகமோசமான ஜிடிபி வீழ்ச்சி என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.இங்கிலாந்து (மைனஸ் 21.7 சதவிகிதம்), பிரான்ஸ் (மைனஸ்18.9 சதவிகிதம்) இத்தாலி (மைனஸ்17.7 சதவிகிதம்), கனடா (மைனஸ்13.0 சதவிகிதம்), ஜெர்மனி (மைனஸ்11.3 சதவிகிதம்), ஜப்பான் (மைனஸ் 9.9 சதவிகிதம்) அமெரிக்கா (மைனஸ் 9.1 சதவிகிதம்) போன்ற உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் இந்தியாதான் அதிகபட்சமாக மைனஸ் 23.9 சதவிகிதம் ஜிடிபி வீழ்ச்சியைச் சந்தித்தது.இந்நிலையில், ஜிடிபி-யைக்கணக்கிடுவதற்கான தரவுகளை அளிக்கும் உற்பத்திக் குறியீடு போன்றதான ஜிவிஏ-வும்(Gross Value Added - GVA) 22.8சதவிகிதம் என்ற அளவிற்கு ஒருபெரிய சரிவைக் கண்டுள்ளது.துறைவாரியாகப் பார்த் தால், தொழிற்துறை ஜிவிஏ 38.1 சதவிகிதம், சேவைத் துறை ஜிவிஏ 20.6 சதவிகிதம், உற்பத்தித் துறை ஜிவிஏ 39.3 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. 2019-20 நிதியாண்டின் ஏப் ரல் - ஜூன் காலாண்டுடன், 2020-21 நிதியாண்டின் ஜூன் காலாண்டை ஒப்பிட்டால், கட்டு
மானத் துறையின் ஜிவிஏ 50.3 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தொலைத் தொடர்பு, ஒளிபரப்பு போன்ற துறைகள் மொத்தமாக 47.0 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளன. சுரங்கம் & குவாரி துறையின் ஜிவிஏ 23.3 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருக்கிறது.

பொது நிர்வாகம், பாதுகாப்பு உள்ளிட்ட சேவைத்துறைகளில் 10.3 சதவிகிதமும், பயன்பாட்டு பொருட்களின் சேவைகள் 7 சதவிகிதமும் சரிந்துள் ளது. நிதி, ரியல் எஸ்டேட், ப்ரொபெஷனல் சேவைகள் 5.3 சதவிகிதமும் இறக்கம் கண்டுள்ளன. விவசாயம், வனம் & மீன் வளத்துறை மட்டுமே 3.4 சதவிகிதம் வளர்ச்சியில் இருந்துள்ளன.

;