tamilnadu

img

தொழிற்துறை உற்பத்தி மைனஸ் 1.1 சதவிகிதமானது

புதுதில்லி:
தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சியானது (Index of Industrial Production -IIP), எப்போதும் இல் லாத வகையில், 2019 ஆகஸ்டில் மைனஸ் 1.1 சதவிகிதம் என்று கடும்அடி வாங்கியுள்ளது.தொழிற்சாலை உற்பத்தி சதவிகிதம் குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை (Ministry of statistics and programme implementation -MOSPI) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த விவரங்கள்இடம்பெற்றுள்ளன.தொழிற்சாலை உற்பத்தி கடந்த2018 ஆகஸ்ட் மாதத்தில் 4.8 சதவிகிதம்என்ற வளர்ச்சி நிலையைக் கொண்டிருந்தது. கடந்த 2019 ஜூலையிலும் கூட 4.3 சதவிகிதமாக இருந்தது. ஆனால், தற்போது 2019 ஆகஸ்டில்மைனஸ் 1.1 சதவிகிதம் என்ற மோசமான நிலைக்கு போயிருக்கிறது.

உற்பத்தித் துறை -1.2 சதவிகிதம், மின்சாரம் -0.9 சதவிகிதம், மூலதனப் பொருட்கள் -21.0 சதவிகிதம், கட்டுமானப் பொருட்கள் -4.5 சதவிகிதம், நுகர்வோர் சாதனங்கள் -9.1 சதவிகிதம் என இழப்பைச் சந்தித்து இருக் கின்றன.நாட்டின் 23 முக்கிய தொழில் துறை குழுமங்களில் 15 குழுமங்களின் தொழிற்சாலை உற்பத்திமைனஸ் நிலைக்கு இறங்கியுள்ளது. இது முந்தைய ஆண்டுகளின் ஆகஸ்ட் மாத முடிவுகளை பார்க்கும்போது மிகவும் குறைவான உற்பத்திஎன்று புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அறிக்கை குறிப் பிட்டுள்ளது.தொழில்துறை உற்பத்தி அல்லது தொழிற்சாலை உற்பத்தி என்பது நாட்டின் வணிக நிலப்பரப்பில் பொருளாதார நடவடிக்கைகளை அளவிடுவதற்கான மிக நெருக்கமான குறியீடாகும். நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார குறியீட்டில்மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளது. 

;