tamilnadu

img

இந்தியாவில் மேலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்க்கு அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,நாட்டில் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை 8.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.2016-ல் எடுக்கப்பட்ட ஆய்வை ஒப்பிடும் போது நகர்ப்புறங்களில் 9.6 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 7.8 சதவீதமாகவும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மேலும் சேவை துறைகளின் வளர்ச்சியும் கடும் சரிவை சந்தித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மோடி அரசு 2014 தேர்தல் அறிக்கையில் 1 கோடி பேருக்கு வேலை தருவதாக கூறியிருந்தது.தற்போது நாட்டின் பொருளாதார மந்தநிலை சீர்கேட்டினால் இருக்கிற வேலையையும் பறிபோகிற நிலைமை உருவாகியுள்ளது.    
 

;