tamilnadu

img

ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் பாலியல் வல்லுறவு குற்றங்கள்!

புதுதில்லி:
இந்தியாவில் பாலியல் குற்றங்கள் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே வருவதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.“பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான ‘போக்சோ’ சட்டம் 2012- இல் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை, கடந்த ஜூலை 10-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே, நிர்பயா உள்ளிட்ட சட்டங்களும் பெண்கள் பாதுகாப்பிற்காக இருக்கின்றன. எனினும், இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களும் பாலியல் வல்லுறவுக் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன” என்று ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.

மாநில வாரியாக 2014 முதல் 2019 வரை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் வழக்குகள் குறித்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதில், உத்தரப் பிரதேசம், தில்லி, ஹரியானா, ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில்தான் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள ஸ்மிருதி இரானி, அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 2014-ஆம் ஆண்டில் 1,802 குற்றங்களும், 2015-ஆம் ஆண்டில் 1,626 குற்றங்களும், 2016-ஆம் ஆண்டில் 809 குற்றங்களும், 2017-ஆம் ஆண்டில் 1,027 குற்றங்களும், 2018-ஆம் ஆண்டில் 1,333 குற்றங்களும், 2019-ஆம் ஆண்டில் 309 குற்றங்களும் நடைபெற்றுள்ளன என்றும் பட்டியலிட்டுள்ளார்.நடப்பு ஆண்டில் இதுவரையிலான காலத்தில் மட்டும் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

;