tamilnadu

img

வெளிநாட்டிலிருந்து பருத்தி இறக்குமதி அதிகரிப்பு

புதுதில்லி:
இந்தியா வெளிநாட்டிலிருந்து பருத்தி இறக்குமதிசெய்வது அதிகரித்துள்ளதாக ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி நிறைவடைந்த பருத்தி பருவத்தில் இந்தியா மொத்தம் 23 லட்சம் பருத்தி மூட்டைகளை (ஒரு மூட்டை 170 கிலோ) இறக்குமதி செய்துள்ளதாக ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ குறிப் பிட்டுள்ளது. 2018 பருவத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பருத்தியைவிட இந்த ஆண்டில் 8 லட்சம்மூட்டைகள் அதிகமான அளவில் பருத்தி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத் திய அரசு குவிண்டாலுக்கு வெறும் 100 ரூபாய் மட்டுமேஉயர்த்தியது. ஆனால், இந்தஉயர்வு இந்தியச் சந்தையில் பருத்தியின் விலை அதிக
ரித்து விட்டதாக கூறி, வெளிநாட்டிலிருந்து பருத்தி இறக்குமதி செய்யப்பட்டுள் ளது. சர்வதேச சந்தையில் பருத்தி விலை மேலும் குறையும் என்றும் ‘இந்தியா ரேட் டிங்ஸ்’ கூறியுள்ளது.இதனிடையே, பருத்தி நூல் ஏற்றுமதியிலும் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேவை குறைவு,சந்தையில் நிலவும் கடுமையான போட்டி ஆகியவற்றின்காரணமாக இந்தியாவின் பருத்தி நூல் ஏற்றுமதி ஜூலைமாதத்தில் 40 சதவிகிததம் வரை சரிந்துள்ளது. சீனாவில் இந்திய பருத்தி நூலுக்கான தேவை 80 சதவிகிதம்குறைந்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 

;