tamilnadu

img

இந்திய நீதிமன்றங்களில் மிகக் குறைந்த பெண் நீதிபதிகள்... நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஒப்புதல்

புதுதில்லி:
இந்தியாவின் உச்சநீதிமன்றம் மற்றும்உயர்நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் மிகவும் மோசமான நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

உச்ச நீதிமன்றம் மற்றும் நாட்டிலுள்ளஉயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை குறித்த கேள்விக்கு அதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.அதில், நாட்டின் அதிகாரமிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34 என்ற நிலையில், வெறும் 2 பெண்நீதிபதிகள் மட்டுமே தற்போது உள்ளனர்என்று தெரிவித்துள்ளார்.25 மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களிலும், அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை ஆயிரத்து 79 ஆகஇருக்கும் நிலையில், இங்கும் 78 பெண்நீதிபதிகளே உள்ளனர்.

அதிகபட்சமாக பஞ்சாப், ஹரியானா மாநில உயர் நீதிமன்றங்களில் 85 நீதிபதிகளில் 11 பெண் நீதிபதிகள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதிகளில் 9 பெண்நீதிபதிகள் உள்ளனர். மிகவும் குறைவாக உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்160 நீதிபதிகளில் வெறும் 6 பெண் நீதிபதிகளே உள்ளனர். மணிப்பூர், மேகாலயா, பீகார், தெலுங்கானா, திரிபுரா, உத்தரகண்ட் மாநிலஉயர்நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளே கிடையாது என்று ரவிசங்கர் பிரசாத்கூறியுள்ளார்.உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம், இந்திய அரசியலமைப்பின் பிரிவு217 மற்றும் 224-ன் கீழ் மேற்கொள்ளப் படுகிறது. இது, பெண்கள் மற்றும் எந்தவொரு சாதி அல்லது வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதில்லை என்பதும் அவரது பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

;