tamilnadu

img

ராமர் கோயில் பூமி பூஜையில் தலித் சாமியார்கள் புறக்கணிப்பு?

லக்னோ:
ஆகஸ்ட் 5 அன்று, அயோத்தியில் நடைபெறவுள்ள ராமர் கோயில் பூமி பூஜைக்கு,பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி. முதல்வர்ஆதித்யநாத் மற்றும் பல்வேறு மடங்களைச் சேர்ந்த சாமியார்கள் என 200 பேருக்கு ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில், தலித் வகுப்பைச் சேர்ந்த துறவி ஒருவருக்குக் கூட அழைப்புவிடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.பூமி பூஜை விழாவிற்கு தன் போன்றவர்களுக்கு அழைப்பில்லை என்று பிரயாக்ராஜில் உள்ள தலித் வகுப்பைச் சேர்ந்ததுறவி மகா மண்டலேஷ்வர் சுவாமி கண் ணையா பிரபுநந்தன் கிரி பகிரங்கமாகவே புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாயாவதி தனதுடுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தலித் வகுப்பைச் சேர்ந்த மகா மண்டலேஷ்வர் சுவாமி கண்ணையா பிரபுநந்தனும் 200 பேர்களில் ஒருவராக அழைக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மற்றொரு பதிவில், “சாதியப் பாகுபாடுகளால் தலித்துக்கள் பாதிக்கப்படுகின்றனர்” என்றும் அவர்குற்றம் சாட்டியுள்ளார்.ராமர் கோயில் பூமி பூஜைக்கு, பிரதமர்மோடியை அழைத்தவர்கள், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு ஏன்,அழைப்பு விடுக்கவில்லை? என்று மஜ்லிஸ்கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியிருந்தார். தலித் என்பதால் அவர் புறக்கணிக்கப்படுகிறாரா? என்ற சந்தேகத்தை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தார்.இந்நிலையில்தான், தலித் சாமியார்களும் பூமி பூஜைக்கு அழைக்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

;