tamilnadu

img

நியாயமான தேர்தல் நடந்தால்... 40 தொகுதிக்கு மேல் பாஜகவுக்கு கிடைக்காது முன்னாள் தலைவர் அஜய் அகர்வால் சொல்கிறார்

புதுதில்லி, ஏப்.16-பாஜகவின் முக்கியத் தலைவர் ளில் ஒருவர் அஜய் அகர்வால். உச்சநீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞரும் ஆவார். கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், அன் றைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து, பாஜக சார்பில் ரேபரேலியில் களமிறக்கப்பட்டவர். இந்நிலையில், அஜய் அகர்வால், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகபகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள் ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:அதாவது, குடியரசு முன்னாள் துணைத்தலைவர் டாக்டர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர், மணிசங்கர் அய்யர் வீட்டில் பாகிஸ்தான் அதிகாரிகளைச் சந்தித்தார்கள் என்ற தகவலை, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர்6-ஆம் தேதி நான் வெளியிட்டேன். அந்தஒரு விஷயத்தை வைத்துத்தான், குஜராத் தேர்தலில் மோடி வெற்றிபெற்றார். இந்த வெற்றிக்காக ஆர்எஸ்எஸ் மூத்தத்தலைவர்களே பலர் என்னைப் பாராட்டினார்கள். எனக்கு பிரதமர் மோடியை 28 ஆண் டுகளாகத் தெரியும். இருவரும் பாஜக அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான முறை ஒன்றாக அமர்ந்து, உணவு சாப்பிட்டுள்ளோம். ஆனாலும் மோடி என்னை இரண்டாம்பட்சமாகவே நடத்துவார்.2014 தேர்தலில், இந்திரா காந்திகுடும்பத்தின் கோட்டைக்கு உள்ளேயே புகுந்து 1 லட்சத்து 73 ஆயிரத்து 721 வாக்குகளைப் பெற்றேன். தற்போது மிகத் திறமையான வேட்பாளரையே நிறுத்தினாலும் ரேபரேலி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகளை, பாஜக-வால் பெற முடியாது. அவ்வளவு ஏன், தற்போது நியாயமான முறையில் தேர்தல்நடந்தால் பாஜக-வுக்கு நாடு முழுவதும்40 தொகுதிகளுக்கு மேல் கிடைக்காது. ஏனெனில் பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் இருக்கிறார்கள். பணமதிப்புநீக்கம் உள்ளிட்ட அவரது திட்டங்கள் மக்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்து விட்டன. இவ்வாறு அஜய் அகர்வால் கூறியுள்ளார்.

;