tamilnadu

img

நான் மாட்டுத்தொழுவத்தில் பிறந்ததால் எனக்கு கொரோனா பாதிப்பு வராது...  மீண்டும் ஒரு பாஜக அமைச்சர் மேடைக்கு வந்துள்ளார்....    

போபால் 
பாஜக ஆட்சி செய்யும் மத்தியபிரதேச மாநிலத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் இமார்த்தி தேவி. சில நாட்களுக்கு முன்பு தான் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் திடீரெனெ பாதியிலேயே சென்றார்.   இமார்த்தி தேவியின் செயலால் அதிர்ச்சியடைந்த நபர்கள் சிலர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறினர்.  

இந்நிலையில் குவாலியரில் இமார்த்தி தேவி செய்தியாளர் சந்திப்பிற்கு வந்தார். அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர்,"உங்களுக்கு கொரோனா இருப்பதாக கூறப்படுகிறதே?’’என்று கேட்ட போது கடும் கோபத்துடன் அதற்கு விளக்கம் அளித்தார்.அதில்,"’நான் மாட்டுத்தொழுவத்தில் பிறந்தவள். என் பக்கத்தில் கொரோனா நெருங்காது’’ என்று கூறினார். 

இந்த விவகாரம் தற்போது டிரெண்டிங் செய்தியாக வலம் வருகிறது. நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் செய்து கலாய்த்து வருகின்றனர். ஏற்கெனவே மத்திய பாஜக அமைச்சர்கள் சிலர் மந்திரம் ஓதினால், அப்பளம் சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு வராது எனக் கூறி மேடைக்கு வந்து டிரெண்டிங்குடன் சென்றுள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஒரு அமைச்சர் மேடைக்கு வந்து நெட்டிசன்களுக்கு வேலை கொடுத்துள்ளார்.    

யார் இந்த இமார்த்தி தேவி... 
மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருக்கும் இமார்த்தி தேவி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதி ராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர் ஆவார். காங்கிரசில் இருந்து சிந்தியா விலகியதும் அவரோடு சேர்ந்து காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்த 22 எம்.எல்.ஏ.க்களில் இமார்த்தி தேவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

;