tamilnadu

img

மலையளவு தடைகளை கடந்து வந்தேன்

உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி பேச்சு

புதுதில்லி, ஜூலை 18- தமிழகத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய சாமி யார் பிரேமானந்தா வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி ஆர்.பானுமதி ஞாயிறன்று ஓய்வு பெறுகிறார். தர்மபுரி மாவட்டத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந் தவர் ஆர்.பானுமதி. சட்டம் படித்து, 1981-ம் ஆண்டு வழக் கறிஞர் தொழிலில் அடியெ டுத்து வைத்தவர். கடந்த 1988-ஆம் ஆண்டு நீதிமன்றப் பணியில் சேர்ந்து செசன்சு நீதிமன்ற நீதிபதி யாக ஆர்.பானுமதி பணி யைத் தொடங்கி 30 ஆண்டு கள் பணியாற்றியுள்ளார். 2003-ஆம் ஏப்ரல் 3-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதி பதியாக நியமிக்கப்பட்ட பானுமதி, பின்னர் 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி யாக பதவி உயர்வு பெற்று அங்கு மாற்றப்பட்டார்.

உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட ஆறாவது பெண் நீதிபதி, உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் இடம் பெற்ற இரண்டாவது பெண் நீதிபதி பானுமதி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய சாமி யார் பிரேமானந்தா வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி  ஆர்.பானுமதி அப்போது புதுக் கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்தார். அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலால் “ஒரு சிறந்த நீதிபதி” என்று பாராட்டப்பட்ட நீதிபதி பானு மதி, 2012 டிசம்பர் 16 ஆம் தேதி நாட்டையே அதிர வைத்த நிர்பயா பாலியல் கும்பல் பலாத்கார வழக்கில் குற்ற வாளிகள் நான்கு பேரும் தாக் கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் நிராகரித்து, அவர்களுக்குத் தூக்குத் தண்டனையை உறுதி செய்தார். தூக்குத் தண்டனை நிறைவேற்றப் படும் சில மணிநேரத்துக்கு முன்பு தாக்கல் செய்த மனு வைக் கூட விசாரித்து, அந்த மனுவையும் நிராகரித்து, தூக்குத் தண்டனையை உறுதி செய்தவர் நீதிபதி பானுமதி.  கடந்த 30 ஆண்டுகால நீதி மன்றப் பணியை முடித்து இன் றுடன் (ஞாயிறு) நீதிபதி ஆர். பானுமதி ஓய்வுபெற உள் ளார். இதற்காக வெள்ளிக் கிழமை நடத்தப்பட்ட பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் நீதி பதி பானுமதி காணொலி வாயிலாகப் பங்கேற்றார். அப்போது அவர் பேசி யதாவது:

‘’நான் இரண்டு வயதாக இருந்தபோது எனது தந்தை ஒரு பேருந்து விபத்தில் உயிரிழந்துவிட்டார். அவ ருக்கான இழப்பீடு கேட்டு என் தாய் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். நீதி மன்றம் எங்களுக்குச் சாதக மான தீர்ப்பளித்தாலும், நீதி மன்றத்தின் பல்வேறு குழப்ப மான நடைமுறைச் சிக்கல் கள், போதுமான சட்ட உதவி கள் இல்லாததால் அந்தப் பணத்தைப் பெற முடிய வில்லை. நீதிமன்றத்தின் செயல் முறை தாமதத்தால் நான், எனது தாய், எனது இரு சகோ தரிகள் பாதிக்கப்பட்டோம். நான் ஓய்வுபெறும் இந்த நாள்வரை அந்த இழப்பீட் டைப் பெறவில்லை. நீதி மன்றப் பணியில் ஏராளமான மலையளவு தடைகள் வந் தன. அவற்றைக் கடந்து தான் வந்துள்ளேன். நான் நீதிமன்றத்தில் நுழைந்தபோது வழக்குகள் தொடர்ந்து தேக்கமடைந் துள்ளன என்ற பேச்சுதான் வரும். இப்போதும் அப்படித் தான் பேசுகிறார்கள். வழக் குகள் தாமதத்தால் பொருளா தாரம் பாதிக்கப்பட்டதாகக் கடந்த காலத்தில் பேசினார்கள். இவ்வாறு ஆர்.பானு மதி பேசினார். உச்சநீதிமன்றத்தில் தற் போது மூன்று பெண் நீதிபதி கள் உள்ளனர். இதில் பானு மதி தவிர்த்து இந்து மல் ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் மற்றவர்கள்.