tamilnadu

img

உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ‘சுதேசி’ பட்டியலில் குளறுபடி....

புதுதில்லி:
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் 1700 மத்திய காவல்துறை மற்றும் ராணுவகேண்டீன்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ராணுவம்,மத்திய ஆயுதப்படை காவல்துறை,  மத்திய காவல்துறை ஆகிய பிரிவில் பணியாற்றும் சுமார் 50 லட்சம் குடும்பத்தினர் பொருட்களை வாங்குகின்றனர். 

இந்நிலையில், கடந்த மே 13 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு ஒன் றப் பிறப்பித்தது.அதில், “ஜூன் 1 முதல் உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்களை மட்டுமே காவல்துறை மற்றும் ராணுவக் கேண்டீன்கள் விற்பனை செய்ய வேண் டும். மற்ற பொருட்களை விற் கக்கூடாது. வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் உள்நாட் டில் தயாரிக்கப்பட்ட பொருட் களை விற்கலாம்.  மாறாக, முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது” என்று கூறியிருந்தது. உள்துறையின் இந்த உத்தரவால் 1026 வெளிநாட்டுப் பொருட்களை விற்க முடியாதுஎன்றானது. இதுதான் தற் சார்பு பாரதத்திற்கான நடவடிக்கை என பாஜகவினரும் பிரச்சாரத்தில் இறங்கினர்.ஆனால், ஜூன் 1 அன்றுதனது உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக, திடீரென மே13 அன்றைய உத்தரவை உள் துறை அமைச்சகம் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. அரசு வெளியிட்ட உள்நாட்டு - வெளிநாட்டு பொருட்கள் தொடர்பான பட்டியலில் குளறுபடி இருப்பதாகவும், இவ்விஷயத்தில் திருத்தப்பட்ட மறு உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித் துள்ளது.

;