tamilnadu

img

திறந்தவெளியில் மலம் கழித்தல் ஒழிந்து விட்டதா? வட இந்தியாவில் காலைநேர ரயில் பயணம் செய்யுங்கள்!

புதுதில்லி:
நாட்டில், திறந்தவெளி மலம் கழித்தல் (Open Defecation) பற்றித் தெரிந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி, வட இந்தியாவில் காலைநேர ரயில் பயணம் செய்து பார்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பினாய் விஸ்வம் கூறியுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில், சில நாட்களுக்கு முன்பு தலித்சிறுவர்கள் 2 பேர் திறந்தவெளியில் மலம் கழித்ததற்காக அடித்துக் கொல்லப் பட்டனர். இதையொட்டி, பிரதமர் மோடிக்கு பினாய் விஸ்வம் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இந்தியாவில் திறந்தவெளி மலம்கழித்தல் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அக்டோபர் 2-ஆம் தேதி, நீங்கள் உரையாற்றுவீர்கள். ஆனால், நீங்கள் வட இந் தியா மாநிலங்களில் காலை நேரத்தில் ரயில் மூலம் பயணம் செய்து அது உண்மையா? என்று பார்க்க வேண்டும். உண்மை நிலை வேறாக இருக்கையில், வெறுமனே அறிவிப்பு வெளியிடுவதில் என்ன பயன் இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் கொல்லப்பட்ட 2 குழந்தைகள் குறித்தும் நீங்கள் உங்கள் உரையில் பேச வேண் டும். தலித் சிறுவர்கள் வேறுவழியில்லாமல் திறந்தவெளியில் மலம் கழித்ததற்காக கொல்லப்படுவதை நம் அரசுகட்டமைப்பால் தடுக்க முடியவில்லை. அந்த குழந்தைகளை இழந்து வாடும் குடும் பங்களின் மீது உங்களுக்கு சிறிதளவேனும் அக்கறை இருந்தால், உங்கள் உரை
யின் கடைசியிலாவது அவர்களைப் பற்றிப் பேச வேண்டும்” என்று பினாய் விஸ்வம் வலியுறுத்தியுள்ளார்.

;