tamilnadu

img

காஷ்மீர் ஆளுநராகும் மோடியின் முன்னாள் செயலாளர்

புதுதில்லி:
 ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கை கோவா மாநிலத்திற்கு இடமாற்றம்  செய்யப்பட்டதால் மத்திய செலவினங்களுக்கான செயலாளர் கிரிஷ் சந்திர முர்மு ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநராகவும், ராதா கிருஷ்ணா மாத்தூர் லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாரதிய ஜனதாகட்சியின்கேரள மாநில தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை மிசோரம் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது மத்திய அரசின் செலவினங்களுக்கான செயலாளராக பணியாற்றி வரும் 59 வயதான முர்மு, இந்த மாத இறுதியில்தான் ஓய்வு பெறுகிறார். ஓய்வு பெற்றவுடன் உடனடியாக துணை நிலைஆளுநராக  பொறுப்பேற்க உள்ளார்.ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த இவர்நரேந்திர மோடி, குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது, அவருக்குமுதன்மைசெயலாளராக பணியாற்றியுள்ளார்.

ராதா கிருஷ்ண மாத்தூர்
லடாக் யூனியன் பிரதேசத்தின் முதலாவது துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ராதா கிருஷ்ணன் மாத்தூர்,இவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியாவார்.மத்திய ஜவுளி தொழில்துறை அமைச்சகத்தில் வளர்ச்சி ஆணையராகவும், அதே அமைச்சகத்தில் தலைமை அமலாக்க அதிகாரியாகவும் இவர் இருந்துள்ளார்.2003ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திரிபுராதலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட இவர், 2016ஆம் ஆண்டு இந்தியாவின் தகவல் தொடர்பு தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டு அந்த பதவியில் இருக்கும்போது நவம்பர் 2018 -ல் ஓய்வு பெற்றார்.

;